சூர்யகுமார் பார்ம் அவுட் ஆனதற்கு காரணம் இது தான்.. நம்பிக்கை வர என்ன செய்யனும்.. சஞ்சய் பங்கர் கருத்து

0
56

இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2025-ஆம் ஆண்டு IPL-இல் அபாரமாகவும் சர்வதேச டி20 போட்டிகளில் மோசமாகவும் ஆடியதற்கு முக்கிய காரணம் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.கடந்த டிசம்பர் 11 அன்று நடைபெற்ற இந்தியா,  தென்னாபிரிக்கா 2வது டி20 போட்டியில் தென்னாபிரிக்கா 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், சூர்யகுமார் வெறும் 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா 162 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் பங்கர், “அணி நிர்வாகத்தின் சிந்தனை முறையும் இதில் பங்கு வகிக்கிறது. நம்முடைய அணியில் நம்பர் 3 முதல் 7 அல்லது 8 வரையிலான இடங்களை எப்போதும் மாற்றம் செய்து கொண்டே இருக்கிறோம்.”

- Advertisement -

காரணமே இது தான்:

“ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு ஒரு நிலையான இடத்தை கொடுத்தது. நம்பர் 3-இல் வந்தால் எந்த சூழலிலும் அங்கேயே நிலைத்து நின்றார். அவரது தரம் என்னவென்றால், எவ்வளவு அதிகமான பந்துகளை எதிர்கொள்கிறாரோ அவ்வளவு சிறப்பாக ரன்களாக மாற்ற முடியும்”

“பின்னால் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்கும் போது அழுத்தம் வேண்டாம். அப்படி இருந்தால் வேறு மாதிரி ஆட வேண்டியிருக்கும். முடிந்தவரை மூன்றாவது இடத்தில் விரைவாக வர வேண்டும். IPL 2025-இல் 16 இன்னிங்ஸ்களில் 65 சராசரியும் 168 ஸ்ட்ரைக் ரேட்டும் கொண்டு ரன் குவித்தார். ஆனால் சர்வதேச டி20-இல் சராசரி 14, ஸ்ட்ரைக் ரேட் 126 என்று சரிந்துள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

நம்பிக்கை வராது:

“சூர்யகுமார் தயக்கத்துடன்  ஆடினார். புட்வொர்க் சரியாக இல்லை. பந்து பேட்டில் பட்டதே தாமதமாகத்தான். இது பார்மில் இல்லாத வீரரின் அறிகுறி. நெட்ஸில் நன்றாக அடித்தாலும், சர்வதேச போட்டியில் ரன்கள் வராத வரை நம்பிக்கை திரும்ப வராது.”

இதையும் படிங்க: நான் சீரியஸா சொல்றேன்.. கம்பீர் பண்றது சரியே இல்ல.. அங்க சூழ்நிலையே வேற – ஆகாஷ் சோப்ரா பேட்டி

” 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக நமக்கு ஒரு நம்பிக்கையுடன் கூடிய சூர்யகுமார் யாதவ் தேவை. அணியின் வெற்றிக்கும் கேப்டனின் பார்ம் மிக முக்கியம்,” என்று சஞ்சய் பங்கர் தெரிவித்தார். 2025-இல் சூர்யகுமார் இதுவரை ஒரு டி20 சர்வதேச அரைசதம் கூட அடிக்கவில்லை அதிகபட்சம் 47* ரன்கள் அடித்துள்ளார்.

- Advertisement -