நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி வீரர் கேஎல்.ராகுல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை தனி ஒரு வீரராக இது என்னுடைய மைதானம் என சிக்னல் செய்தார். இதற்கு இன்று பதிலடியாக விராட் கோலி ஒன்றை செய்வார் என சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார்.
இன்று விடுமுறை நாளில் ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்க இரண்டாவது போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. கேஎல்.ராகுல் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் செய்த காரியத்தால் இந்த போட்டிக்கு எதிர் பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
கடந்த முறை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்பில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இருந்தது. பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் கேஎல் ராகுல் கடினமான நேரத்தில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியை வீழ்த்தினார்.
இதன்பிறகு அவர் பேட்டால் ஒரு வட்டம் போட்டு அதன் நடுவில் குத்தி ‘இது என்னுடைய இடம்’ என்று சிக்னல் செய்தார். இது ஆர்சிபி அணி நிர்வாகம் தன்னை தன் மாநில அணிக்கு வாங்காமல் விட்டதற்கு கேஎல்.ராகுல் தந்த பதிலடி என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில்தான் தற்போது இந்த இரண்டு அடிகளும் டெல்லியில் மீண்டும் மோதிக்கொள்ள இருக்கின்றன.
இப்படியான சூழ்நிலையில் விராட் கோலி கேஎல் ராகுல் தங்களது சொந்த மைதானத்தில் செய்த சம்பவத்திற்கு விராட் கோலி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் விராட் கோலிக்கு சொந்த மாநிலம் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு பீட்டர்சன் கிடைச்சாச்சு.. ரெண்டு பசங்க சேர்ந்து கப் அடிக்க போறாங்க.. சுரேஷ் ரெய்னா கணிப்பு
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது ” கேஎல்.ராகுலுக்கு பதிலடியாக விராட் கோலி இதை கொஞ்சம் வித்தியாசமாக செய்வார் என்று நான் நினைக்கிறேன். அதாவது டெல்லி வீரர்கள் அமர்ந்திருக்கும் பெவிலியனை பார்த்து, நீங்கள் அமர்ந்திருக்கும் இடமே என்னுடையது என்பதாக அவர் செய்வார் என்று நினைக்கிறேன். அதாவது இந்த இடத்திற்கு நான்தான் முதலாளி என்று சொல்வார் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.