“காயம் காரணமாக உலக டெஸ்ட் பைனலில் கோலி ஆடுவதில் சிக்கல்?” – முக்கிய அப்டேட் கொடுத்த ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்

0
1750

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தொடர்ந்து இரண்டு சதம் அடித்து அசத்தினார். குஜராத்துக்கு எதிராக தனி ஆளாக போராடிய விராட் கோலி 61 பந்தை எதிர்கொண்டு 101 ரன்களை விளாசினார்.

இந்த நிலையில் விராட் கோலி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது 15 வது ஓவரில் விஜய் சங்கர் அடித்த பந்தை சிராஜ் அபாரமாக கேட்ச் பிடித்தார். அப்போது அவருடைய முட்டி காலில் காயம் ஏற்பட்டது.

- Advertisement -

இதனை அடுத்து உடனடியாக மருத்துவர்கள் விராட் கோலியை ஆய்வு செய்து அவரை போட்டியிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து விராட் கோலி வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு திரும்பி விட்டார். அதன் பிறகு அவர் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் இரண்டு வாரத்தில் நடக்க இருக்கிறது.

இதில் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் அதில் பங்கேற்பாரா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு மத்தியில் இருந்தது. இந்த நிலை இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆர் சி பி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விராட் கோலிக்கு காலில் லேசான பிடிப்பு போல் இருக்கிறது.

ஆனால் பயப்படும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். நான்கு நாள் இடைவெளியில் விராட் கோலி இரண்டு சதங்களை அடித்திருக்கிறார். விராட் கோலி பேட்டிங்கில் மட்டும் விளையாடினால் போதும் என்று நினைக்கக் கூடிய வீரர் கிடையாது. பில்டிங் செய்யும் போதும் 100% தன்னுடைய பங்கை கொடுத்து விளையாடுவார்.

- Advertisement -

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40 ஓவரும் இன்று 35 ஓவரும் களத்தில் நின்று இருக்கிறார். விராட் கோலி எப்போதுமே தன்னுடைய பெஸ்ட் தான் அணிக்காக கொடுப்பார். இவ்வளவு கடும் உழைப்பை கொடுக்கும் போது நிச்சயமாக உடலளவில் ஏதேனும் பாதிப்பு அடையத்தான் செய்யும்.

ஆனால் இந்த காயம் பயப்படும் படி அளவுக்கு இல்லை என்று சஞ்சய் பங்கர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இன்று அதிகாலையே மும்பை வந்து அடைந்தார்கள். விராட் கோலி ஒரு வாரம் ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.