18 ரன் 6 பந்து.. சைலன்ஸ் செய்த கம்மின்ஸ்.. வெளியேறிய சிஎஸ்கேவின் டிஎஸ்கே போராடி தோல்வி.. எம்எல்சி 2024

0
268
MLC

அமெரிக்கா எம்எல்சி டி 20 லீக்கின் இரண்டாவது இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் சாம் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடுமையாக போராடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் வெளியேறியது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அனுப்பி துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அதிரடி வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் 14 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

அதே சமயத்தில் இன்னொரு துவக்க ஆட்டக்காரரான நியூசிலாந்தின் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். 53 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 101 ரன்கள் குவித்து பிரம்மாண்டப்படுத்தினார். இதற்கு அடுத்து ஜோஸ் இங்லீஸ் 25 பந்தில் 37 ரன், ஹசன் கான் 15 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள்.

20 ஓவர்கள் முடிவில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் நூர் அகமது மிகச் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களுக்கு 27 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். அதே சமயத்தில் மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை கொடுத்து விட்டார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் 26 பந்துகளில் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் புகழ்ந்தது. இதில் கேப்டன் பாப் டு பிளேசிஸ் மட்டுமே 22 பந்தில் 45 ரன்கள் அதிரடியாக எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கான்வே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து அதிரடியாக 38 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து வந்த ஹாரோன் ஹார்டி மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் ஏமாற்றினார்கள். ஒரு பக்கம் கான்வே உடன் இணைந்து போராடிய ஜோஸ்வா டிரம்ப் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏழு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 10 ஓவர்களில் 91 நான்கு விக்கெட்டுகள் என்று இருந்த சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் பேட் கம்மின்ஸ் 18வது ஓவரில் 11 ரன், 20வது ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து கடைசியில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

இதையும் படிங்க : நான் இப்போ இதுல பெஸ்ட்டா இருக்க தோனிதான் காரணம்.. இந்த வித்தை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாரு – தீக்ஷானா கூறும் ரகசியம்

இறுதியாக 20 ஓவர்களில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பத்திரங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

- Advertisement -