தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தற்போது அமெரிக்காவின் டி20 தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் போட்டியில் டெக்சா சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெல்ல வேண்டிய போட்டியை மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி தோற்று இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வெல்ல வேண்டிய போட்டியை தோற்று இருக்கிறது.
12 பந்து 12 ரன்
இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நிக்கோலஸ் பூரன் 7 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பொல்லார்டு 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். சன்னி படேல் 11 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இந்த அணி கடைசி இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் பவுலர் அட்டகாசம்
இதைத்தொடர்ந்து விளையாடிய சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டிம் செய்பர்ட் 27 பந்தில் 33 ரன், பின் ஆலன் 6 பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து மிடில் வரிசையில் ஹசன் கான் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். அந்த அணி 12.2 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்திருந்தது. எனவே தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : பும்ரா இல்லை.. இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டு பவுலர் இவர்தான்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து மைக்கேல் கிளார்க்
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் சேவியர் பார்ட்லெட் பேட்டிங் வரிசையில் எட்டாவதாக வந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உடன் 59 ரன்கள் எடுத்து சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை திரில் வெற்றி பெற வைத்தார். மீண்டும் வெல்ல வேண்டிய போட்டியை மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி தோற்றது.






