அயர்லாந்து அணிக்கெதிராக சாம்சன் மற்றும் டிருப்பதிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்காது ; இவருக்குதான் வாய்ப்பு கிடைக்கப் போகிறது – ஆகாஷ் சோப்ரா உறுதி

0
138

இம்மாத இறுதியில் இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட போகிறது. இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. நீண்ட நாட்கள் கழித்து சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல முதல்முறையாக ராகுல் டிருப்பதி இந்திய அணியில் களமிறங்கப் போகிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு வருடங்களாகவே இவர்கள் இருவரும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் இந்திய அணியில் ஒன்றாக விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

கடைசியில் இவர் தான் விளையாடப் போகிறார்

அயர்லாந்து அணிக்கு எதிராக நிச்சயமாக ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இஷான் கிஷன் மற்றும் ருத்துராஜ் களமிறங்கி விளையாடுவார்கள் அவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவார். ஐந்தாவது இடத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடும் பட்சத்தில் நான்காவது இடம் தான் தற்பொழுது கேள்விக்குறி.

அந்த நான்காவது இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ராகுல் டிருப்பதி விளையாட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் என்னைப் பொருத்தவரையில் அந்த இடத்தில் ஆல்ரவுண்டர் வீரராக தீபக் ஹூடா விளையாட போகிறார்.

- Advertisement -

நடைபெற்றுக்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணியில் உள்ளார் இருப்பினும் மூன்று போட்டிகளின் முடிவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே நெதர்லாந்து அணிக்கு எதிராக அவருக்கு வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்பு உள்ளது.

இரண்டு போட்டிகள் மட்டுமே கொண்ட தொடர் என்பதால் நிச்சயம் நிறைய மாற்றங்கள் இருக்காது. தீபக் ஹூடா விளையாடும் பட்சத்தில் அவரை ஐந்தாவது இடத்தில் விளையாட வைத்து ஹர்திக் பாண்டியாவை நான்காவது இடத்தில் விளையாட வைக்கலாம்.

எனது தீபக் ஹூடா விளையாடவே அதிக வாய்ப்பு உள்ளது ஒருவேளை அவருக்கு அந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் அவர் நேரடியாக கேள்வி கேட்டு விடுவார்.”இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்காத பட்சத்தில் எதற்காக என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என்று”. இவ்வாறு ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.