48 வருட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில், நேற்று டெல்லி மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது போலான, ஒரு வெற்றி எங்கிருந்தும் வந்தது கிடையாது.
இதற்கு முன்பாக சிறிய அணிகள் பெரிய அணிகளை உலகக் கோப்பை தொடரில் வீழ்த்தி இருக்கின்றன. இந்திய அணியை பங்களாதேஷ் அணியும், இதே இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணியும் வீழ்த்தி இருக்கிறது.
ஆனால் நேற்று ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்த வெற்றிகளை விட மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது. இதற்கான வாழ்த்துக்கள் பல இடங்களில் இருந்தும் ஆப்கானிஸ்தான் அணிக்கு சமூக வலைதளங்களில் குவிந்து கொண்டிருக்கிறது.
இது ஏன் பெரிய வெற்றி என்றால், இங்கிலாந்து அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நடப்பு உலக சாம்பியன் ஆக இருக்கிறது. மேலும் அந்த அணியின் பேட்டி யூனிட் என்பது இந்த வடிவ கிரிக்கெட்டில் மிகவும் நீளமான ஆபத்தான ஒன்றாக இருக்கிறது.
தற்போதைய இங்கிலாந்த அணி களத்தில் இறங்கினால் இந்த போட்டியில் 500 ரன்கள் அடித்து விடுவார்களா என்று பலரும் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்கள் பேட்டிங் யூனிட் அதிரடியான ஆபத்தான ஒன்றாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து, இரண்டாவதாக பந்துவீச்சின் மூலம் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் வென்று இருப்பது என்பது, இதுவரையிலான உலகக் கோப்பை வரலாற்றில் பெறாத ஒரு சிறப்பு வெற்றியாக பதிவாகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தன்னுடைய பாணியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு வாழ்த்து இட்விட்டை பதிவு செய்திருக்கிறார்.
அதில் அவர் “உங்களுக்கு சல்யூட் ஆப்கானிஸ்தான். நீங்கள் இந்த கிரிக்கெட் வரலாற்றில் இல்லாமல் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அப்செட் ஒன்றை செய்து காட்டி விட்டீர்கள். உங்களுக்கு என் மரியாதை!” என்று குறிப்பிட்டிருக்கிறார்!
Salute you AFGHANISTAN 🇦🇫. You have pulled offff the biggest upset in WC cricket. If not in the history of the game. Respect. @rashidkhan_19 @Mujeeb_R88 #CWC2023 #ENGvsAFG pic.twitter.com/o59wpS6Sxc
— Ravi Shastri (@RaviShastriOfc) October 15, 2023






