“இது டெஸ்ட் போட்டி பிட்ச் டி20 பிட்ச் இல்லை” – பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் விமர்சனம்!

0
164
Salman butt

இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் அயர்லாந்து இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் என்ற ஒரு மிக நீண்ட கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்தது. இந்திய அணியின் இந்த நீண்ட சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு வெற்றி பயணமாகவே அமைந்திருந்தது.

நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் ஐசிசி அங்கீகாரம் பெற்ற மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய 5வது டி20 போட்டி இந்த நீண்ட சுற்றுப் பயணத்தின் கடைசி போட்டியாகும்!

- Advertisement -

கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோற்று முதல் சுற்றோடு வெளியேறியதிலிருந்து, இந்திய வலைப்பந்து கிரிக்கெட் அணியின் மீது மிகப்பெரிய நெருக்கடி உருவாகியிருந்தது. மேலும் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்று நீண்ட வருடங்கள் ஆகியிருந்தது. இதனால் இந்திய அணியை மறுசீரமைப்பு கொண்ட வேண்டிய கட்டாயம் நிலவியது. இந்திய அணியின் இந்த நீண்ட சுற்றுப்பயணம் இந்த மறுசீரமைப்புக்கு உதவியிருக்கிறது என்று கூறலாம்.

நேற்று நடந்த ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களில் சுருண்டு 88 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமாக தோற்றது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வித்தியாசமான ஒரு மோசமான சாதனையை செய்திருந்தது. அது என்னவென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தன் மொத்த 10 விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விட்டுக் கொடுத்தது. டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் எந்த ஒரு அணியும் தனது மொத்த 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தாரை வார்த்தது கிடையாது. இப்படி ஒரு வினோத சாதனையை நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி செய்தத!

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த மோசமான சாதனை குறித்தும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையான பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்

இதுபற்றி சல்மான் பட் கூறும்போது “இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்து வீசினார்கள். ரவி பிஷ்நோய் நல்ல லைன் லென்த்தில் வீசினார். அவர் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு பந்தை அடிக்க நேரமே தரவில்லை. குல்தீப் யாதவும் மீண்டும் சிறப்பாக திரும்பி வந்திருக்கிறார். அவரது பந்து வீச்சும் மிகச் சிறப்பாக இருந்தது. நேற்று விளையாடிய ஆடுகளத்தை பார்க்கும்போது அது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஐந்தாவது நாள் ஆடுகளத்தை போலவே இருந்தது. இதை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி விட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -