“சாய் சுதர்சன் 15 வது ஓவரிலேயே ரிட்டையர் அவுட் ஆகியிருக்கணும்” – தமிழக வீரரை விமர்சித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்!

0
4855

பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது சென்னை அணியுடன் முதல் போட்டியில் தோற்ற குஜராத் அணி லக்னோ அணியை எலிமினேட்டரில் வீழ்த்தி வந்த மும்பை அணியை எதிர்கொண்டது .

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி சுப்மன் கில்லின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 233 ரன்கள் குவித்தது . அபாரமாக ஆடிய கில் 60 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இதில் ஏழு பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும்.

- Advertisement -

துவக்கத்தில் சாகா ஆட்டம் இழந்த பிறகு கில்லுக்கு உறுதுணையாக நின்று ஆடினார் தமிழக வீரர் சாய் சுதர்சன் . ஒருபுறம் கில் அதிரடியாக ஆட மறுமுனையில் இருந்து அவருக்கு ஒன்று இரண்டு ரண்களை எடுத்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 63 பந்துகளில் 138 ரன்கள் சேர்த்தனர் . ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய பார்ட்னர்சிப்பாக இது அமைந்தது .

எனினும் இறுதி ஓவர்களில் விரைவாக ரன் குவிக்க வேண்டி சாய் சுதர்சனை ரிட்டயர் அவுட் செய்து ரஷித் கானை களம் இறக்கியது குஜராத் அணி . அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் 31 பந்துகளில் 43 ரன்கள் உடன் ரிட்டயர் அவுட் ஆனார் . இதனைத் தொடர்ந்து ஆடிய மும்பை 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது .

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி சாய் சுதர்சனின் ஆட்டம் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது அவர் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சாய் சுநதர்சனின் ஆட்டம் குறித்தான தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் மூடி .

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக ஆடினார் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை . ஆனால் அவரை முன்கூட்டியே ரிட்டயர் அவுட் செய்திருக்க வேண்டும். ஐந்து ஓவர்கள் மீதும் இருந்த நிலையில் அவரை வெளியேற்றி இருந்தால் டேவிட் மில்லர் ரஷித் கான் மற்றும் தேவாட்டியா போன்ற வீரர்கள் வந்து அதிரடியாக ஆடி இன்னும் ரண்களை சேர்த்து இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” சாய் சுதர்சன் 21 பந்துகளில் 27 ரன்களை எடுத்து ஆடிக் கொண்டிருந்தபோது பதினைந்தாவது ஓவரிலேயே அவரை ரிட்டயர் அவுட் செய்திருக்க வேண்டும் . அந்த நேரத்தில் அதிரடி வீரர்கள் களம் இறங்கி ரண்களை வேகமாக குவிக்க வாய்ப்பாக அமைந்திருக்கும் என்று நான் கருதுகிறேன் . சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக ஆடினார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . அவர் ஒரு முனையில் நின்று ஆடியவிதம் தான் கில் மறுமுனையில் வேகமாக கண்களை குவிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியாது . ஆனால் அதிரடியான விக்கெட்டுகள் கையில் இருக்கும் போது ஐந்து ஓவர்களுக்கு முன்பாக அவரை ரிட்டயர் அவுட் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார் டாம் மூடி.

.