விருத்திமான் சஹாவிற்கும் ராகுல் டிராவிட்க்கும் இடையே கருத்து வேறுபாடு – சமாதானமாக சென்ற பயிற்சியாளர் டிராவிட்

0
194
Wriddhiman Saha and Rahul Dravid

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளிவந்தது. அந்தப் பட்டியலில் சீனியர் வீரர்களான விருத்திமான் சஹா அஜிங்கிய ரஹானே புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை. விருத்திமான் சஹா இரஞ்சி டிராபி தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். இதனையடுத்து இந்திய அணியிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இது சம்பந்தமாக அவர் சமீபத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுத்து இருந்தார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னிடம் “இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ரிஷப் பண்ட்டை வைத்தே முத்தரப்பு போட்டிகளிலும் விளையாட நினைக்கிறது. ரிஷப் பண்ட்டுக்கு அடுத்தபடியாக ஒரு இளம் விக்கெட் கீப்பரை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு என்னை வலியுறுத்தினார்” என்று விருத்திமான் சஹா வெளிப்படையாகக் கூறினார்.

- Advertisement -

அவ்வாறு அவர் கூறியது எந்த பேப்பரும் என்னை காயப்படுத்தவில்லை

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை அதிரடியாக ஒயிட் வாஷ் செய்து வரலாற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் விருத்திமான் சஹா ராகுல் டிராவிட் குறித்து கூறிய விஷயங்களை கூறி அதற்கான விளக்கத்தை கேட்டனர்.

அதற்கு ராகுல் டிராவிட்”விருத்திமான் சஹா இந்திய அணிக்கு நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். சிறப்பான விக்கெட் கீப்பர் மற்றும் சிறப்பான பேட்ஸ்மேனாக தன்னுடைய பணியை வாய்ப்பு கிடைத்த வேலையில் கச்சிதமாக செய்திருக்கிறார். என் சார்பில் அவருக்கு தனியாக மரியாதை உண்டு.

- Advertisement -

ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையை ஒருபொழுதும் மறைத்துவிட முடியாது. இந்திய அணிக்கு மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரிஷப் பண்ட் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இதற்கு அடுத்து இந்திய அணிக்கு ஒரு இளம் விக்கெட் கீப்பரே தற்பொழுது முதலே தயார்படுத்த வேண்டும். எனவே இனி சஹாவிற்கு முன்பு கிடைத்தது போல் வாய்ப்பு கிடைக்க பெறாது. இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர்கள் மூலமாக அவர் தெரிந்து கொள்வதை விட தெளிவான விளக்கத்தை என் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

தற்பொழுது ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இருந்து ஏதேனும் 11 வீரர்கள் தான் அந்த போட்டியில் விளையாடுவார்கள். போட்டியில் விளையாடாத வீரர்களிடம் நான் அல்லது கேப்டன் ரோஹித் நேரடியாகச் சென்று நீங்கள் விளையாட வில்லை என்று அவர்களுக்கான விளக்கத்தைக் கொடுத்து விடுவோம். போட்டியில் ஒரு வீரர் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்றால், அந்த வீரருக்கு மனதளவில் நிச்சயமாக சிறிய கவலை இருக்கும்.

எனவே அதை நீடிக்க விடாமல் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக வே தெளிவாக அவர்களிடம் விஷயத்தை கூற கூற வேண்டும். அதைத்தான் நான் விருத்திமான் சஹாவிடம் செய்தேன். விருத்திமான் சஹா என்னைப் பற்றி கூறிய விஷயங்கள் மூலமாக நான் எந்த விதத்திலும் காயப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் எப்போதும் எனக்கு உண்டு என்று கூறி முடித்தார்

- Advertisement -