இந்திய கிரிக்கெட்

சாதனை படைத்த சச்சின் மகன்.. ஒயிட் பால் கிரிக்கெட்டில் அபாரம்.. விஜய் ஹசாரே டிராபி 2024- 25

இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி 2024-25 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் குரூப் ஏ ஆட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கோவா மற்றும் ஒடிசா அணிகள் பங்கேற்று விளையாடின.

- Advertisement -

இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடிய நிலையில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

விஜய் ஹசாரே ட்ராபி 2024-25

ஒரு நாள் தொடர் வடிவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி 2024-25 சீசனின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ஒடிசா மற்றும் கோவா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவா அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. கோவா அணியில் அதிகபட்சமாக இஷான் 93 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு கேப்டன் தர்ஷன் 79 ரன்கள் மற்றும் பிரபுதேஷாய் 74 ரன்கள் குவித்தனர்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஒடிசா அணி களம் இறங்கியது. கோவா அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஒடிசா அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 344 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கோவாவின் அர்ஜுன் டெண்டுல்கர் 10 ஓவர்கள் வீசி 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக கோவா அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

சாதனை படைத்த அர்ஜுன் டெண்டுல்கர்

இதில் இடது கை வேக பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது இந்த போட்டிக்கு முன்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 48 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில் இந்தப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 41 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். இதில் 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 24 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க:2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. விராட் ரோஹித் இல்லை .. இந்திய வீரர் கேப்டன்.. ஹர்ஷா போக்லேவின் லெவன் அணி

முதன் முதலாக அவரது கிரிக்கெட் பயணம் ஜூனியர் மட்டத்தில் மும்பை அணிக்காக தொடங்கிய நிலையில் அதற்குப் பிறகு அண்டர் 19 அணியில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். அதற்குப் பின்னர் 202-23 ஆம் ஆண்டில் கோவா அணிக்காக மாறினார். அதற்குப் பிறகு அவர் தனது லிஸ்ட் ஏ மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by