இந்திய கிரிக்கெட்

5 இந்திய பேட்ஸ்மேன்களுக்கு.. சச்சின் தந்துள்ள தனித்தனி வேற லெவல் ஐடியா.. சரி செய்வார்களா?

இந்திய பேட்டிங் யூனிட்டில் கே எல் ராகுல் தவிர்த்து, மற்ற ஐந்து பேட்ஸ்மேன்களும் எந்த விஷயத்தை சரி செய்து கொள்ள வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தனித்தனியாக ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய பேட்டிங் யூனிட்டில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலிமையானவராக கேஎல்.ராகுல் இருக்கிறார். கருண் நாயர் வரையில் மற்ற ஐந்து பேட்ஸ்மேன்களும் பேட்டிங் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இவர்களுக்கு தனித்தனியாக தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனை கூறியிருக்கிறார்.

சச்சின் தந்துள்ள ஆலோசனை

ரிஷப் பண்ட் : இவர் பேட்டிங் செய்வதற்கு கிரீஸில் இருந்து வெளியே நிற்கிறார் என்றால், இவர் எந்த கார்டில் அதாவது ஸ்டெம்பில் நிற்கிறார் என்பது முக்கியம். இவர் கிரீசை விட்டு வெளியே நிற்கிற பொழுது முடிந்த வரையில் ஆப் ஸ்டெம்ப் பக்கமாக தள்ளி நிற்க வேண்டும்.

சுப்மன் கில் : இவருக்கு ஒரு பந்தை டிரைவ் செய்யும் லென்த் இல்லை என்றால், அந்த பந்தை இவர் நேராக விளையாட முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இவருடைய முன் கால்கள் நன்றாக நீட்டி முன்னே வரவேண்டும். அதிலிருந்து இவர் பந்தை விரட்டலாம் அல்லது தடுத்து விளையாடலாம். தடுத்து விளையாடுவதில் நீட்சிதான் பந்தை டிரைவ் செய்வது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் : பந்தை வேகமாக அடிப்பதற்கான பேட் ஸ்விங் இவருடைய மனதில் வேலை செய்கின்ற காரணத்தினால், இவர் பந்தை லேட்டாக விளையாட வேண்டியது உருவாகிவிடுகிறது. எனவே இதில் இவர் கவனம் செலுத்த வேண்டும்.

சாய் சுதர்சன் இதைச் செய்ய வேண்டும்

கருண் நாயர் : இவர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். எனவே எப்பொழுது தாக்கி விளையாட வேண்டும் எப்பொழுது தற்காத்து விளையாட வேண்டும் என்பது இவருக்கு நன்றாக தெரியும். பந்து பழையதாக இருக்கும் பொழுது ஸ்விங் இருக்கும் ஆனால் பெரிய அளவில் ஜிப் இருக்காது. எனவே அந்த நேரத்தில் இவர் தாக்கி விளையாடலாம்.

இதையும் படிங்க : நான் பார்த்து இருக்கேன்.. விராட் ரோஹித் வலைக்கு வந்ததும்.. பும்ரா உடனே இதை செய்வார் – ரவி சாஸ்திரி பேச்சு

சாய் சுதர்ஷன் : இவர் வெர்டிகல் பேட் ஷாட் விளையாடும் பொழுது, இவருடைய பேட் இவருடைய உடலை ஒட்டி இருந்தால் இவர் சிறப்பானவராக இருக்க முடியும்.

- Advertisement -
Published by

Recent Posts