உங்களுக்கு ஒரு சூரியவன்சி இருக்கும் போது காலத்தால் அழியாத பிளாக் பஸ்டர் கிடைக்கும் – சச்சின் விராட் வாழ்த்து

0
4
Sachin

நேற்று 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். இதை இந்திய லெஜெண்ட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

உலக பிரபலம் சூரியவன்சி

தற்போது 14 வயதாகி இருக்கும் நேற்றைய போட்டியில் வெறும் 80 பந்தில் 175 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்சி தற்பொழுது உலகெங்கும் பிரபலமான ஒரு மனிதராக மாறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் விரைவாக சதம் அடித்த பொழுதே அவர் பலரால் தேடப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டிக்குப் பிறகு இன்னும் அவருடைய பிரபலம் மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறது. மிகக்குறிப்பாக நேற்று அவர் அந்த அளவுக்கு அதிரடியாக ஆடவில்லை என்றால் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக ஆட்டத்தை வென்று இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சூரியவன்சி இருக்கும்போது

விராட் கோலி தன்னுடைய வாழ்த்தில் கூறும் போது “உலகக் கோப்பையை மீண்டும் வென்றதற்காக இந்திய அண்டர் 19 அணிக்கு என்னுடைய பாராட்டுக்கள். வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் மட்டும் அல்லாமல் எல்லா பக்கத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய முழு அணிக்கும் அணியின் ஊழியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: கம்பீரின் இந்த நம்பிக்கை வெறும் கட்டுக்கதை.. ஆஸ்திரேலியா இதை வச்சுதான் பல வருஷம் உலக கிரிக்கெட்டை ஆண்டாங்க – க்ரிஷ் ஸ்ரீகாந்த்

சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தில் “இந்த இளம் அணிக்காகவும் இவர்கள் விளையாடிய அச்சமற்ற கிரிக்கெட்டுக்காகவும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பயிற்சியாளர் உள்பட மொத்த அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களிடம் ஒரு வைபவ் சூர்யவன்சி இருக்கும் பொழுது காலத்தால் அழியாத ஒரு பிளாக்பஸ்டர் எதிர்பார்க்கப்படுகிறது. சபாஷ் சூரியவன்சி!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -