ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வந்தது. முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடக்கிறது.
இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றிருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மகாண மைதானத்தில் நான்காவது டி20 போட்டி நேற்று நடந்தது.
டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மிகச் சிறப்பாக விளையாடிய சிம்ரன் ஹெட்மையர் 39 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. இந்த மைதானத்தில் இந்த ரன் வழக்கமான சரியான ஒரு ரன்னாகத்தான் இருந்தது.
இந்த நிலையில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் புத்திசாலித்தனமான அதிரடியில் இந்திய கிரிக்கெட் அணையின் நிர்வாகத்தை பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார்கள்.
இந்த ஜோடி வெற்றிக்கு 179 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 165 ரன்கள் எடுத்துக் கொடுத்தது. கில் 47 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் 51 பந்தில் எடுத்தார். இந்தியா 17 ஓவர்களில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது. இந்த நிலையில் இன்று தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இதே மைதானத்தில் நடக்க இருக்கிறது.
ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரது துவக்க ஆட்டம் பற்றி பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில் ” இந்தியாவுக்காக விளையாடக்கூடிய ஒவ்வொருவரும் சமமான திறன்களைக் கொண்ட வீரர்கள்தான். ஆனால் இந்த இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். இவர்கள் விளையாடக்கூடிய விதத்தில் இவர்கள் தங்களுக்கான இடத்தை கண்டுபிடித்து விட்டால், இவர்கள் இந்தியாவில் இருந்து ஒரு ஆபத்தான கிரிக்கெட் ஜோடியாக உலக கிரிக்கெட்டில் வருவார்கள்.
இவர்கள் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்புகளை பெற்று விளையாடி வந்தால், இவர்கள் இந்தியாவில் இருந்து வந்த மிகச் சிறப்பான துவக்க ஜோடியான சச்சின் மற்றும் கங்குலி போல மிகப்பெரிய சாதனைகளை துவக்க இடத்தில் படைப்பார்கள். இவர்களால் அவர்களைப் போல வரும் அளவுக்கு திறமை இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!






