எஸ்ஏ 20 ப்ளே ஆப் சன்ரைசர்ஸ் vs ஜேஎஸ்கே .. பாதி சிஎஸ்கேவை இறக்கும் பிளமிங்.. எந்த சேனலில் பார்க்கலாம்.? முழு விவரம்

0
262

ஐபிஎல் பாணியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஸே 20 தொடர் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தத் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் பிடித்த இரு அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் விளையாடுகிறது.

நாக் அவுட் போட்டியான இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டியில் விளையாடும். இல்லையென்றால் தொடரை விட்டு வெளியேறிவிடும். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ள அணி தான் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பல முன்னாள் இந்நாள் வீரர்கள் இந்த அணியில் இடம் பிடித்து இருக்கின்றனர்.

- Advertisement -

இரு அணிகளின் செயல்பாடுகள்:

ஆனால் இதுவரை நடைபெற்ற இரண்டு சீசன்களிலும் ஜே எஸ் கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதனால் இந்த வரலாற்றை டுபிளசிஸ் மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புச் சாம்பியனாக களமிறங்கி இருக்கும் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஆரம்பத்தில் தோற்றது.

ஆனால் அதன் பிறகு செய்த தவறை திருத்திக் கொண்டு தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றது. கடைசியாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல்ஸ் அணியிடம் சன்ரைசர்ஸ் தோற்றாலும், அந்த அணி வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஜே எஸ் கே அணியை பொறுத்தவரை நான்கு வெற்றி ஐந்து தோல்விகளை லீக் சுற்றில் பெற்றிருக்கிறது.

- Advertisement -

எனினும் தொடரின் நடுவில் ஜே எஸ் கே அணி கொஞ்சம் தடுமாறியது. கடைசியாக சன்ரைசர்ஸ் அணியுடன் ஜே எஸ் கே விளையாடிய போது வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் அதே உத்வேகத்துடன் ஜேஎஸ்கே அணி இந்த ஆட்டத்தில் விளையாடலாம். இந்த எலிமினேட்டர் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை இரவு 9 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும்.

எந்த சேனல், பிளேயிங் லெவன் விவரம்:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்போர்ட்ஸ் 18 2 ஆகிய சேனல்களில் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கலாம். இந்த போட்டியின் நடைபெறும் செஞ்சுரியன் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் சோபிக்க முடியும். சுழற் பந்துவீச்சாளர் கொஞ்சம் தடுமாறுவார்கள். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது சாலச் சிறந்தது. இங்கு கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் சேசிங் செய்த அணியை மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: டேவிட் பெடிங்ஹாம், டோனி டி சோர்ஜி, ஜோர்டான் ஹெர்மன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , டாம் ஆபெல், மார்கோ ஜான்சன், லியாம் டாசன், கிரேக் ஓவர்டன், ஒட்னீல் பார்ட்மேன் மற்றும் ரிச்சர்ட் க்ளீசன்.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: டெவோன் கான்வே ,  டுபிளஸிஸ் (கேப்ட்ன்), லியுஸ் டு ப்ளூய், மொயின் அலி, விஹான் லுபே, சிபோனெலோ மகன்யா, டொனோவன் ஃபெரீரா, ஹர்டஸ் வில்ஜோன், மஹீஷ் தீக்ஷனா, தப்ரைஸ் ஷம்சி மற்றும் லுதோ சிபம்லா.

- Advertisement -