மைக் ஹஸ்ஸி ரெக்கார்டை காலி செய்த ருத்துராஜ்… 7 சிக்சர், 3 பவுண்டரியுடன் 79 ரன்கள் அடித்து வெறித்தனமான ஆட்டம்! – சாதனை பட்டியலில் டாப் யார்?

0
622

சிஎஸ்கே அணிக்கு ஓபனிங்கில் மீண்டும் ஒருமுறை அரைசதம் அடித்து மைக் ஹஸ்ஸியின் ரெக்கார்டை முறியடித்துள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வரும் லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இப்போட்டி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய போட்டியாகவும் இருக்கிறது. இதில் டாஸ் வென்ற தோனி, சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

இதனையடுத்து களம் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஓபனிங் ஜோடி மீண்டும் ஒருமுறை மிகச்சிறப்பான துவக்கம் கொடுத்தது. வழக்கம்போல டெவான் கான்வெ ஒரு பக்கம் நிதானமாக விளையாடினார். மற்றொரு பக்கம் ருத்துராஜ் அதிரடியாக பவுண்டரி சிக்ஸர்களை விளாசி வந்தார்.

அக்சர் பட்டேல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள், குல்தீப் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் விலாசி டெல்லி அணியை கதிகலங்க வைத்தார் 37 பந்துகளில் அரைசதம் அடித்த இவர், உடனடியாக ஆட்டத்தை அடுத்த கியருக்கு எடுத்துச் சென்று இன்னும் வேகமாக அடிக்க 50 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்.

துரதிஷ்டவசமாக சேத்தன் சக்கரியா பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து வெளியேறினார் ருத்துராஜ். சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் அடிக்கும் 14ஆவது அரைசதம் இதுவாகும்.

- Advertisement -

இதன் மூலம் ஓப்பனிங்கில் சிஎஸ்கே அணிக்கு அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் மைக் ஹஸ்ஸியின் 13 அரைசதங்கள் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலாவது இடத்தில் பதினாறு அரைசதங்களுடன் பாப் டு ப்ளசிஸ் இருக்கிறார். சாதனை பட்டியலை பின்வருமாறு காண்போம்.

சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங்கில் அதிக அரை சதங்கள் அடித்தவர்கள்

  1. பாப் டு பிளசிஸ் – 16 அரைசதங்கள்
  2. ருத்துராஜ் கெய்க்வாட் – 14 அரைசதங்கள்
  3. மைக் ஹஸ்ஸி – 13 அரைசதங்கள்