வந்தான்… செஞ்சுரி அடிச்சான்… போனான்… ரிப்பீட்டு – விஜய் ஹசாரே தொடரில் ருத்ரதாண்டவம் ஆடும் ருத்ராஜ் கெய்க்வாட்

0
543
Ruturaj Gaikwad in Vijay Hazare Trophy

2021-2022 விஜய் ஹசாரே டிராபி தொடர் நேற்று ஆரம்பமானது. நேற்று தொடங்கிய இத்தொடர் வருகிற 26ம் தேதி அன்று நிறைவு பெறுகிறது. லீக் போட்டிகள் நேற்றிலிருந்து மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. வீரர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய திறமையை காண்பித்து வருகின்றனர். அந்த வீரர்களில் குறிப்பாக ருத்ராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து இரண்டு சதங்களை குவித்துள்ளார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட் மகாராஷ்ட்ரா அணியில் கேப்டனாக விளையாடி வருகிறார்.நேற்று மத்திய பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில், மத்தியபிரதேச அணி முதலில் பேட் செய்து 328 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மகாராஷ்டிரா அணி, ருத்ராஜ் அடித்த சதம் காரணமாக கடைசி ஓவரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் ருத்ராஜ் ஜெய்க்வாட் 112 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தமாக 136 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

நேற்றை தொடர்ந்து இன்றும் சதம் அடித்து ருத்ராஜ் கெய்க்வாட் அசத்தல்

நேற்று மத்திய பிரதேச அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் சதம் அடித்த ருத்ராஜ் கெய்க்வாட், இன்று சட்டீஸ்கர் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இன்று நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சட்டீஸ்கர் அணி 275 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 47 ஓவர்களிலேயே சட்டீஸ்கர் அணி நிர்ணயித்த இலக்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் 143 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 154 ரன்கள் குவித்து இறுதிவரை ருத்ராஜ் ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக இன்றைய போட்டியில் சிக்ஸர் மூலமாக தனது சதத்தை ருத்ராஜ் கெய்க்வாட் பதிவு செய்திருப்பது கவனிக்க வேண்டியது.

இரண்டு போட்டிகளில் இரண்டு சதங்களுடன் மொத்தமாக 290 ரன்கள் குவித்து, இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல 28 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் என அந்த இரண்டு பட்டியலிலும் ( அதிக பவுண்டரிகள் மற்றும் அதிக சிக்ஸர்கள் ) முதல் இடத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -