மீண்டும் மீண்டும் சதம் விளாசும் ருத்ராஜ் கெய்க்வாட் – விஜய் ஹசாரே டிராபி தொடரில் வரலாற்று சாதனை படைத்த சி.எஸ்.கே சிங்கம்

0
369
Ruthuraj Gaikwad

விஜய் ஹசாரே டிராபி தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா அணி கடந்த இரு போட்டிகளிலும் ( மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் அணிகளுக்கு எதிராக ) வெற்றி பெற்று குரூப் டி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டியில் கேரள அணைக்கு எதிராக விளையாடி வருகிறது

முதல் இரண்டு போட்டியிலும் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். முதல் போட்டியில் மத்தியபிரதேச அணிக்கு எதிராக 112 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தமாக 136 ரன்கள் குவித்தார். முதல் போட்டியை அடுத்து இரண்டாவது போட்டியில் சட்டீஸ்கர் அணிக்கு எதிராக 143 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 154 ரன்கள் குவித்து இறுதிவரை ருத்ராஜ் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இன்று மீண்டும் தன்னுடைய ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்த ருத்ராஜ்

முதலிரண்டு போட்டியைப் போலவே இன்று மூன்றாவது போட்டியில் கேரளா அணிக்கு எதிராக 129 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என 124 ரன்கள் குவித்துள்ளார். மகாராஷ்டிரா அணியில் திரிபாதி 108 பந்துகளில் 99 ரன்கள் குவித்து ஒரு ரன் வித்தியாசத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தாரர். இவர்கள் இருவரது சிறப்பான பங்களிப்பின் காரணமாக மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்துள்ளது.

மூன்று போட்டிகளில் மூன்று சதங்களுடன் 417 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ருத்ராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொடரில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் தற்போது 207 ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.