“ரோகித் இது சரிப்பட்டு வராது.. இதனால தான் அவுட் ஆகறிங்க!” – சுனில் கவாஸ்கர் கூறிய முக்கிய காரணம்!

0
2047
Gavaskar

ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி குறித்து நிறைய சந்தேகங்களும் விமர்சனங்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து வந்தது!

காயத்திலிருந்து திரும்பிய இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஒன்று சேர்ந்து விளையாடிய பொழுது, இந்திய அணி எதிர்பார்க்காத அளவிற்கு ஆற்றல் கொண்ட அணியாக தெரிந்தது. இந்தியா ஆசியக் கோப்பையை வென்றது.

- Advertisement -

இதனால் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருப்பதாக காணப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்தார்கள். இவர்கள் விளையாடும் பொழுது மிடில் ஆர்டர் மிகவும் வசதியாக உணர்ந்தது.

இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்பொழுது உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கொஞ்சம் பதட்டமாக காணப்பட்டார். அவரது இயல்பில் பேட்டிங் அணுகுமுறை இல்லை. இது மிடில் ஆர்டருக்கு பெரிய சுமையை கூட்டும் விஷயமாக மாறுகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய லெஜெண்ட் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஐந்து சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் என அடித்தார். இந்த உலகக் கோப்பை அவருக்கு கடைசியாகவும் இருக்கலாம். ஆனால் அவரோ பூஜ்ஜியத்தில் இந்த உலகக் கோப்பையை ஆரம்பித்திருக்கிறார்.

பந்துக்கு அவருடைய கால் மிக மெதுவாக
வருகிறது. இதன் காரணமாக அது அவருக்கு பாதிப்பாக மாறுகிறது. 2019 ஆம் ஆண்டு இருந்த பேட்டிங் ஃபார்மை அவர் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி அமைந்தால் இந்தியாவிற்கு ஒரு நல்ல உலகக்கோப்பை அமையும்.

சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்த சுப்மன் கில் இல்லாமல் போனது இந்திய அணிக்கு பெரிய கவலையை கொடுப்பதாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவதாக இருந்தால் இந்தியா கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும்.

அந்த இளைஞன் அற்புதமான பார்மில் இருந்தார். அவர் அதையே உலகக் கோப்பையில் தொடர முடியுமா? என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் ஒரே ஆண்டில் சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த ரன்களை அவரால் முந்தி செல்ல முடியுமா? என்கின்ற அளவிற்கு எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் அவர் எதிர்பாராத விதமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விட்டார்!” என்று கூறி இருக்கிறார்!