“உலக கோப்பைக்கு இன்னும் 9 மாசம் இருக்கு” – பங்களாதேஷ் தொடருக்கு முன்பு ரோஹித் ஷர்மா வெளிப்படை பேச்சு

0
522

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நாளை முதல் வங்கதேச தலைநகரான டாக்காவில் தொடங்க உள்ளது . இந்த போட்டிகளுக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் . அடுத்த வருடம் ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் நடைபெறும் எல்லா ஒருநாள் போட்டிகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

போட்டி தொடருக்கு முன்பான செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய இந்தியனின் கேப்டன் ரோஹித் சர்மா “இந்தத் தொடரை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை வெற்றிக்காக கடுமையாக போராடுவோம்” என்று கூறினார் , இது குறித்து மேலும் பேசிய அவர் ” வங்கதேச அணி கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது அவர்கள் உலகின் எல்லா அணிகளுக்கும் சவாலான அணியாகவே இருக்கிறார்கள் அதனால் நாங்கள் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறினார் .

- Advertisement -

வங்கதேச அணி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் “வங்கதேச அணி ஒரு போராட்ட குணம் உடைய அணி நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் அவர்களுடைய ஆட்டம் மிகவும் சவாலாக இருந்தது அவர்களிடம் போராடியே நாம் வெற்றி பெற்றோம் இதனால் நாங்கள் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை வெற்றிக்காக கடமையாக உழைக்க வேண்டி இருக்கும் மேலும் அவர்களிடம் 2015 ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்திருக்கிறோம் . இதில் வெற்றி பெற எங்களுடைய முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் ” என்று கூறினார் .

வங்கதேச அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் தமீம் இக்பால் மற்றும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமத் ஆகியோரின் காயம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” அவர்கள் இருவரும் வங்கதேச அணிக்கு ஆட்டத்தையே மாற்றக்கூடிய பேட்ச் வின்னர்கள் அவர்கள் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் மற்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் மேலும் எதிரணி நிலை பற்றி அதிகமாக சிந்திப்பதை விட எங்களுடைய திட்டங்களிலேயே அதிக கவனம் செலுத்துவோம்” என்று கூறினார் ரோஹித் சர்மா ,

2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரோஹித் சர்மா ” உலக கோப்பை தொடருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது . அதற்குண்டான திட்டங்களுடனே பயணிக்கின்றோம் . ஒரு சிறந்த அணியுடன் உலக கோப்பையை எதிர்கொள்வதையே விரும்புகிறோம் . அணியின் மேலாண்மை மற்றும் பயிற்சியாளர் ஆகிய வரும் உலக கோப்பையை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் . உலகக்கோப்பை போட்டி வரை சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்காக இருக்கிறது ” என்று கூறினார்

- Advertisement -

இந்நிலையில் ஒரு நாள் போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சாமிக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் . இதே போல வங்கதேச அணியிலும் அவர்களின் கேப்டன் தமீம் இக்பால் காயம் காரணமாக விலகியதால் அணியின் துணை கேப்டன் லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் , ட ஸ்கின் அகமதுவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷரிஃக்குள் இஸ்லாம் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் .