கிரிக்கெட்

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர் – ஐசிசி வெளியிட்ட புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல்

சமீபத்தில் வெளியான ICC தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்திய வீரர் பின்னுக்கு தள்ளியுள்ளார். உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கும் போது முதல் இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இதனால் விராட்டின் ஆதிக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்து விட்டதோ என்று பல ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

ஐந்தாவது இடத்தில் இருந்த விராட் கோலியை ஆறாவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளியவரும் ஒரு இந்திய வீரர் தான். உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கும் போது 54வது இடத்தில் இருந்த ரோகித் தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.

ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று பல பண்டிதர்கள் கூறிக் கொண்டிருந்த போது, தற்போது இந்த விமர்சனங்களை எல்லாம் உடைத்து ஐந்தாவது இடத்திற்கு தரவரிசையில் முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.

ரோகித் உடன் இணைந்து தர வரிசையில் முன்னேறி உள்ள மற்றொரு வீரர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆவார். இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இவர் தற்போது மூன்று நாட்கள் முடிந்த நிலையில் முதல் இடத்திற்கு வந்துள்ளார். இந்தத் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களிலும் மூன்று சதங்களை அடித்து விளாசிய ஜோ ரூட் தான் தற்போதைய கிரிக்கெட் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன்.

- Advertisement -

நாட்டிங்காம், லார்ட்ஸ், லீட்ஸ் என மூன்று மைதானங்களிலும் தொடர்ந்து சதங்களை விளாசி தள்ளிய இந்த தொடரில் 507 ரன்களை இப்போதே குவித்து விட்டார் ரூட். இப்படி சிறப்பான ஆட்டம் காரணமாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை பின்னுக்கு தள்ளி சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளார் ஜோ ரூட்.

மற்றொரு இந்திய வீரரான புஜாரா மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அடித்த 91 ரன்கள் காரணமாக 18வது இடத்தில் இருந்து 15 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் என இருவருக்கும் மிகச் சிறிய அளவே தரவரிசையில் வித்தியாசம் இருப்பதால், அடுத்தடுத்து யார் சிறப்பாக ஆடப் போகிறார்கள் என்பதைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Published by