ஐபிஎல் 2024

ஜாக் பிரேசர் கிடையாது.. எங்கள் தோல்விக்கு முழு பெருமையும் இவருக்கு தான் – சஞ்சு சாம்சன் வெளிப்படை பேச்சு

இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கையில் இருந்த ஆட்டத்தை ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டெல்லி அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது.

இதற்கு அடுத்து இந்த முறை டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட அபிஷேக் போரல் மிகச் சிறப்பாக விளையாடி 36 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஜெய்ஸ்வால் பட்லர் மற்றும் ரியான் பராக் மூன்று பேரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டினார். ஆனால் ஒரு சர்ச்சைக்குரிய முடிவில் சாம்சங் 46 பந்தில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததும், ராஜஸ்தான் வெற்றி கனவு முடிந்தது. இறுதியில் அந்த அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது. ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் தேவைப்பட்டது. இது ஐபிஎல் தொடரில் எடுக்கக்கூடிய ரன்கள்தான். நாங்கள் கண்டிஷனுக்கு தகுந்தவாறு விளையாட விரும்புகிறோம். நாங்கள் கூடுதலாக ஒரு பத்து ரன்கள் தந்து விட்டோம். மேலும் டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் இன்றும் அவர் செல்லும் வழியில் சிறப்பாக விளையாடினார். நாங்கள் மூன்று ஆட்டங்களில் தோற்று இருக்கிறோம். மூன்றுமே மிக நெருக்கமான போட்டிகள். நாங்கள் சிறப்பாக திரும்பி வரவேண்டும்.

இதையும் படிங்க : சாம்சனுக்கு சர்ச்சை அவுட்.. ராஜஸ்தான் போராடி தோல்வி.. பிளே ஆப் வாய்ப்பில் சிஎஸ்கே உடன் டெல்லி போட்டி

சந்தீப் சர்மா போன்ற ஒருவருக்கு எதிராக கடைசியில் சிறப்பாக விளையாடிய ஸ்டப்ஸுக்கு எல்லா பெருமையும் சேர்க்க வேண்டும். அவர் சந்தீப் மற்றும் சாகலுக்கு எதிராக இரண்டு மூன்று சிக்ஸர்களை கூடுதலாக அடித்தார். அதுதான் வித்தியாசமாக அமைந்தது. நாங்கள் தோற்று விட்டோம் எனவே தோல்விக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Published by