ஸ்மித்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஷேடோ பேட்டிங்’ செய்த ரோஹித் ஷர்மா

0
55413
Rohit Sharma Shadow Bats
சிட்னியில் நடந்து முடிந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் ‘ஷேடோ பேட்டிங்’ ‍ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல வித சந்தேகங்களை‌ ஏற்படுத்தின.எனினும்,வீடியோ ஆதாரங்களில் ரிஷப் பண்டின் கார்ட் மார்க்கை ஸ்மித் அழிக்கவில்லை என்று தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.ஸ்மித்தின் இச்செயலுக்கு நான்காவது டெஸ்ட்டில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் ஷர்மா.
 
 நான்காவது டெஸ்ட் போட்டி:
 
சிட்னியில் நடந்த பரபரப்பான டெஸ்டில் அஸ்வின் மற்றும் விஹாரியின் தடுப்பாட்டத்தால் இந்திய அணி அப்போட்டியை டிரா செய்தது.பார்டர்-கவாஸ்கர் டிராபி 1-1 என சமனில் உள்ளது.நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் மாத்யூ வேடை தவிர அனைவரும் பொறுப்பாக விளையாடினர்.அணியின் முதுகெலம்பாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் விளாசினார்.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 
காபா டெஸ்டில் ரோஹித் ஷர்மாவின் ஷேடோ பேட்டிங்:
 
இச்சம்பவம்,நான்காவது நாளின் 2ஆவது செஷனின் போது நடைபெற்றது.ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித் மற்றும் கிரீன் விளையாடி கொண்டிருக்கும் போது ஸ்ட்ரைக்கர் பக்கம் வந்த இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா திடீரென்று ‘ஷேடோ பேட்டிங்’ செய்யத் தொடங்கினார்.

ரோஹித் ஷர்மா ஷேடோ பேட்டிங் செய்து கொண்டிருந்ததை ஸ்டீவ் ஸ்மித் எதிரில் இருந்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.ரோஹித்தின் இந்த செயல் ஸ்மித்திற்கு தக்க பதிலடி என்று இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர்.  

ஸ்மித்தின் விளக்கம்:  

- Advertisement -

ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவரின் வசிதிக்கேற்ப கார்ட் மார்க் அமைத்து கொண்டார்.இது போன்ற கார்ட் மார்க் அமைப்பது பொதுவான ஒரு விஷயம் தான்.பண்ட் வரைந்து வைத்திருந்த கார்ட் மார்க்கை ஸ்மித் அழித்துவிட்டார் என்று பல குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.ஆனால் வீடியோ காட்சிகளில் ஸ்மித் அவ்வாறு செய்யவில்லை என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது.  

சிட்னி டெஸ்ட் முடிவடைந்த பிறகு இதைப்பற்றி ஸ்மித்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் கூறுகையில் “இவ்வாறு ஷேடோ பேட்டிங் செய்வது எங்களது வழக்கம்.நாங்கள் எங்கு பந்துவீசுகிறோம் என்பதை உணரவே இவ்வாறு செய்தேன்.ஆனால் இதை ஒரு குற்றச்சாட்டாக கருதி என்மேல் பழி போடுவதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.”   ஷேடோ பேட்டிங் செய்வது ஸ்மித்தின் வழக்கம்.அவர் எந்த ஒரு கார்ட் மார்க்கையும் அழிக்கவில்லை என்று ஸ்மித்திற்கு சாதகமாக பேசியுள்ளார் கேப்டன் டிம் பெய்ன்.