இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தான் பெற்ற சிறந்த வெற்றிகள் பற்றி பேசும்பொழுது அவருடைய பாணியில் மறைமுகமாக இங்கிலாந்து அணியும் கலாய்த்தது தற்பொழுது வைரலாக மாறி வருகிறது.
இந்திய அணி 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. காபா மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியை ரிஷப் பண்ட் அதிரடியில் வென்று தொடரையும் வென்றது. பல முன்னணி வீரர்கள் காயத்தின் காரணமாக விலகி இருந்தார்கள். ஆனால் அந்தத் தொடரில் ரோகித் சர்மா விளையாடினார்.
இதுகுறித்து பேசி உள்ள ரோகித் சர்மா கூறும் பொழுது ” நாங்கள் 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் காபா டெஸ்ட் போட்டியை வென்று தொடரையும் வென்றோம். ரிஷப் பண்ட் பேட்டிங் அற்புதமாக இருந்தது. மேலும் அந்தப் போட்டிக்கு முன்பாக அப்போதைய கேப்டன் டிம் பெயின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொஞ்சம் சர்ச்சையாக பேசி இருந்தார்”
” அவர் பேசியது எங்களை பாதித்தது. எங்களுடைய முதல் தேர்வு வீரர்கள் அந்த போட்டியில் இல்லை. மூன்று அறிமுக வீரர்கள் இருந்தார்கள். அந்த மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டை போல் இருந்தது. எங்கிருந்து வந்தது என தெரியாத அளவிற்கு அந்த போட்டியில் எங்களுக்கு வெற்றி வந்தது”
“நாங்கள் அந்தப் போட்டியில் பெற்ற வெற்றி மிகப் பெரியது. அந்தப் போட்டியின் வெற்றி எங்களுக்கு தொடரின் வெற்றியாகவும் மாறியது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது மிகவும் கடினமானது. அதுவும் ஆஸ்திரேலியாவில் விளையாடி வெல்வது மிக கடினமானது. இதை நீங்கள் இங்கிலாந்திடம் கூட கேட்டு தெரிந்து கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: தோனி கேப்டனாக இருந்திருந்தால், அதிக போட்டியில் விளையாடி இருப்பேனா? உங்களுக்கு இந்த விசயமே தெரியாது.. அமித் மிஸ்ரா
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாலில் ஆசஸ் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் இங்கிலாந்து தோற்று தொடரையும் இழந்து இருக்கிறது. அவர்கள் விளையாடும் பாஸ்பால் அணுகுமுறை பெரிய விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் வெல்ல முடியாததை தன்னுடைய வழக்கமான நகைச்சுவை உணர்வோடு ரோகித் சர்மா கூறியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.