தோனி கேப்டனாக இருந்திருந்தால், அதிக போட்டியில் விளையாடி இருப்பேனா? உங்களுக்கு இந்த விசயமே தெரியாது.. அமித் மிஸ்ரா

0
124

இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, முன்னாள் இந்திய கேப்டன் தோனி குறித்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளித்தார். முன்னாள் லெக் ஸ்பின்னர் ஆன மிஸ்ரா, யூடியூப் சேனலில் பேசிய அவர், தோனி கேப்டனாக இல்லையென்றால் தாம் அதிக போட்டிகளில் விளையாடியிருப்பேன் என்று கூறினர்.

இது குறித்து பேசிய அவர், “தோனி இல்லையென்றால் என் கேரியர் சிறப்பாக இருந்திருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவர் இல்லையென்றால் நான் அணியிலேயே இருந்திருக்க மாட்டேன் என்பது யாருக்குத் தெரியும்? நான் அவரது கீழ்தான் அணிக்கு வந்தேன். திரும்பத் திரும்ப கம்பேக் கொடுத்தேன்.”

- Advertisement -

“கேப்டனாக அவர் ஒப்புக்கொண்டதால்தான் நான் திரும்பி வந்தேன். எனவே விஷயங்களை நேர்மறையாகப் பார்க்கலாம்” மிஸ்ரா 2003-ல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். 2008-ல் டெஸ்ட் அறிமுகமும், 2010-ல் டி20 அறிமுகம் ஆனார்.

தோனியின் ஆதரவு:

22 டெஸ்ட், 36 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 76, 64, 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தோனி தனக்கு எப்படி ஆதரவளித்தார் என்பதை மிஸ்ரா விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு ஆதரவு இருந்தது. நான் 11-ல் இருக்கும்போது எப்போதும் தோனி என்னிடம் வந்து டிப்ஸ் கொடுக்காமல் இருந்ததில்லை. எப்போதும் ஏதாவது சொல்வார்.”

- Advertisement -

” நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது என் கடைசி ஒருநாள் தொடர். தோனி கேப்டன். இறுக்கமான போட்டி. நான் பந்துவீச வந்தேன், நாங்கள் 260-270 ரன்கள் எடுத்திருந்தோம். ரன்களை நிறுத்திவிட்டு விக்கெட் தேட வேண்டாம் என்று நினைத்தேன். இரண்டு ஓவர்களுக்குப் பிறகு தோனி என்னிடம் வந்து, நான் என் இயல்பான பந்துவீச்சை வீசவில்லை என்றார்.”

தோனி சொன்ன அட்வைஸ்:

“அதிகம் யோசிக்க வேண்டாம். எப்போதும் வீசுவதை வீசு என்றார். அதன்படி செய்தேன், விக்கெட் கிடைத்தது. இதுதான் உன் பந்துவீச்சு, இப்படித்தான் வீசு, அதிகம் யோசிக்காதே என்றார். அது போட்டியை மாற்றிய ஸ்பெல். ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினேன்.அது என் சிறந்த ஸ்பெல்லாகவும் இருக்கும். விக்கெட் வீழ்த்தாவிட்டால் போட்டியை இழந்திருப்போம் என்று அவர் நினைத்தார். இப்படித்தான் அவர் எனக்கு ஆதரவளித்தார்”.

மிஸ்ரா செப்டம்பர் 2025-ல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். அவர் 162 IPL போட்டிகளில் விளையாடி 174 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சராசரி 23.82, எகானமி 7.37 உடன் மூன்று ஹாட்ரிக்களும் எடுத்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலிக்கு இடையிலான அணுகுமுறை வித்தியாசத்தை அமித் மிஸ்ரா சுட்டிக்காட்டினார். அதில்,”தோனி உத்திகளை மனதில் வைத்துக்கொண்டு வீரர்களிடம் சொல்வார். ஆக்ரோஷமாக இருக்க மாட்டார். விராட் ஆக்ரோஷமானவர். இருவருக்கும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற ஒரே மனநிலைதான்.”

இதையும் படிங்க: ஐபிஎல் 2026.. சிஎஸ்கே கிடையாது.. பிளே ஆப் சுற்றுக்கு இந்த 4 அணிகள் தான் தகுதி பெறும்.. அமித் மிஸ்ரா

“ஆனால் அணுகுமுறை வேறு. என்னைப் பொறுத்தவரை, நான் விளையாடியபோது தோனியையே அதிகம் விரும்புவேன். ஏனெனில் கேப்டன் அப்படித்தான் இருக்க வேண்டும். எதிரணி அவர் என்ன நினைக்கிறார், என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளக் கூடாது. கோபமாக இருந்தாலும் எதிரணி தெரிந்துகொள்ளக் கூடாது.இருவருக்கும் ஒரே நோக்கம், ஆனால் முறை வேறு. தோனி அதிகம் மனதுடன் விளையாடுவார்,” என்று அவர் கூறினார்.

- Advertisement -