தற்போது ரோகித் சர்மாவை ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து வந்தார். இந்த நிலையில் டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்தில் அவர் ஓய்வு பெற்றதால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடும் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
கம்பீரின் அதிரடி
இந்த நிலையில் வயதான மற்றும் சரியாக விளையாடாத வீரர்களை நீக்கி இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை மூன்று வடிவத்திற்கும் உருவாக்கும் முயற்சியை கம்பீர் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தலைமை பயிற்சியாளராக உள்ளே வந்ததும் மூத்த வீரர்கள் வெளியே சென்று விடுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படியே தற்போது நடந்து வருகிறது.
அதே சமயத்தில் ரோகித் சர்மா 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்பயணத்துடன் ரோகித் சர்மாவை ஓய்வு பெறும்படி வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
விராட் கோலி நிலைமை என்ன?
அதே சமயத்தில் விராட் கோலி விரும்பினால் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது. ஆனால் விராட் கோலி இந்த விஷயத்தில் என்ன முடிவெடுத்து இருக்கிறார்? என்று இதுவரையில் தெரியவில்லை.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. பிசிசிஐ எடுத்த புதிய முடிவு – வெளியான தகவல்கள்
விராட் கோலிக்கு ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் மிகவும் பொருத்தமானதாக இருந்து வருகிறது. அவர் சரியாக விளையாடாத காலகட்டத்தில் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் சராசரியாக விளையாடினார். எனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு விராட் கோலியின் அனுபவத்தை திறமையை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ள நினைப்பதாக செய்திகள் கூறுகிறது.






