“சிவம் துபேவுக்கு தோனி செய்த அதையே ரோகித் சர்மாவும் செய்கிறார்” – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
72
Raina

தற்பொழுது இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளையும் இந்தியா அணி வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிவம் துபே பேட்டிங்கில் ஆட்டம் இழக்காமல் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் பந்துவீச்சிலும் இரண்டு போட்டியிலும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வென்று இருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சு பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த இடத்தில் இந்த வகையான பந்துவீச்சை அடித்து விளையாடுவதற்கு சிவம் துபே ஒரு ஆயுதமாக இருக்கிறார். உயரமான பேட்ஸ்மேன் என்பதால் பந்தை நின்ற இடத்தில் இருந்து அவரால் தூக்கி அடிக்க முடிகிறது. மேலும் வலிமையானவர் என்பதால் மிகச் சுலபமாக இதைச் செய்கிறார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2022 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, மிகத் துல்லியமாக அவருடைய பலத்தை அறிந்து அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அத்தோடு அவருக்கு சுதந்திரமும், விளையாடும் வாய்ப்புக்கான உறுதிமொழியும் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் தெளிவாகவும் அச்சமின்றி சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

சிவம் துபேவுக்கு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ன வேலையை கொடுத்ததோ, தற்பொழுது இந்திய அணியில் ரோகித் சர்மா அதே வேலையை கொடுத்திருக்கிறார். மத்திம ஓவர்களில் சுழற் பந்துவீச்சை தாக்குவது அவருடைய பொறுப்பு. மேலும் பந்துவீச்சிலும் தற்பொழுது இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்றாகவே பார்க்கப்படுகிறார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “ஹர்திக் பாண்டியா காயம் குணமடைந்து வந்தாலும் பிளேயிங் லெவனில் பேட்ஸ்மேன் ஆக சிவம் துபே இருக்க முடியும். ரோகித் சர்மா அவரை மிக நன்றாகப் பயன்படுத்துகிறார்.

ஐபிஎல் தொடர் மிக முக்கியமானதாக இருக்கும். பொதுவாக எந்த வீரர்கள் சிறந்த பார்மில் இருக்கிறார்களோ அவர்களையே எடுத்துக் கொள்ள கேப்டன்கள் விரும்புவார்கள்.

இது ரோகித் சர்மாவின் இந்திய அணி. ரோகித் சர்மா நிச்சயமாக சிறந்த பார்மில் இருக்கும் வீரர்களை விரும்புவார். சிவம் துபே இப்பொழுது எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். மேலும் இதை ஐபிஎல் தொடரிலிருந்து செய்கிறார்.

அவர் எம்எஸ்.தோனி போன்ற ஒரு கேப்டனை கவர்ந்தார். தற்பொழுது ரோகித் சர்மாவையும் அவர் கவர்ந்திருக்கிறார். மேலும் தோனி அவருக்கு என்ன மாதிரி நம்பிக்கையை கொடுத்தாரோ, அதே நம்பிக்கையை ரோகித் சர்மாவும் அவருக்கு கொடுத்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.