சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு.. ஒருநாள் கிரிக்கெட் ஆடுவாரா? – வெளியான அறிவிப்பு

0
152
Rohit

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா தற்பொழுது திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டுவரப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தற்பொழுது வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே அந்த அணியில் விளையாடுகிறார். டெஸ்ட் அணியிலும் இப்படி தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஓய்வுக்கான காரணம் என்ன?

கடந்த சில நாட்களாக ரோகித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க போகிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. மேலும் அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக டெஸ்ட் அணியில் தொடர்பாக எனவும், புதிய கேப்டனாக கில் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தோற்றது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்களது நாட்டில் படுதோல்வி அடைந்தது, மேலும் தற்போது 38 வயதாகி இருப்பது எல்லாம் சேர்ந்து ரோகித் சர்மாவை ஓய்வு முடிவுக்கு தள்ளி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 67 போட்டிகளில் 116 இன்னிங்ஸ்களில் விளையாடி, 40.57 ஆவரேஜ் உடன் 4301 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 12 சதங்கள் மற்றும் 18 அரை சதங்கள் அடக்கம். மேலும் இவரது தலைமையில் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு முறை தகுதி பெற்று ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க : நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்.. ஆனாலும் இதை நினைச்சா கொஞ்சம் பெருமையாதான் இருக்கு – மும்பை கோச் பேட்டி

இதுகுறித்து ரோகித் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் “அனைவருக்கும் வணக்கம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்பதை எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன். வெள்ளை உடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியது மிகவும் பெருமையான விஷயம். இதுவரைக்கும் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியும் அன்பும். அதே சமயத்தில் நான் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -