நான் வித்தியாசமாக ஓடி வந்து கொண்டாட காரணம் இதுதான்.. ஜடேஜா வேறு மாதிரி ஒன்று சொன்னார் – ரோகித் சர்மா விளக்கம்

0
23

நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மொத்த வீரர் ரோஹித் சர்மா 75 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். சதம் அடித்த பொழுது வித்தியாசமாக ஓடி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தற்போது இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறுவது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் சதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் போது “அந்தக் கொண்டாட்டத்தை நான் எனக்கானதாக மட்டுமே வைத்திருக்கிறேன்.
அது எனக்கானது. அது எனக்கு மட்டுமே உரியது. சில விஷயங்கள் உங்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டியவை, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. அதனால் அது எனக்காக மட்டுமே”

“ஜடேஜா சதக் கொண்டாட்டத்தைப் பற்றிக் கேட்டது என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். உடைமாற்றும் அறையில் சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் புதுமையாக யோசித்தார். ‘நீ ஓடிவந்து ஸ்லைடு செய்து குதிக்க வேண்டும், அப்படித்தான் நீ கொண்டாட வேண்டும்’ என்றார். அதற்கு நான், ‘தம்பி, 50 ஓவர் ஃபீல்டிங் செய்துட்டு, அப்புறம் 25-30 ஓவர் பேட்டிங்கும் செஞ்சதுக்கு அப்புறம் என்னால கண்டிப்பா அதைப்பெல்லாம் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -