ரோகித் மாதிரியே எனக்கும் டிராவிட்டுக்கும் செஞ்சாங்க.. கில்லுக்கும் இது நடக்கும் – கங்குலி பேச்சு

0
36

ரோகித் சர்மாவை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் முடிவை
முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி,ஆதரித்து பேசியுள்ளார். சுப்மன் கில்லை இந்தியாவின் புதிய ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

  2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தை நோக்கிய ஒரு முடிவாக கங்குலி பாராட்டியுள்ளார். , அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை வரும்போது ரோஹித் ஷர்மாவுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும், விராட் கோலிக்கு 38 வயதாக இருக்கும் என்பதால், இளைய தலைவரை தயார்படுத்துவதற்கு இது சரியான தருணம் என்று விளக்கினார்.

- Advertisement -

நீக்கமா என தெரியவில்லை:

இது குறித்து பேசிய அவர்,  “இந்த முடிவு குறித்து ரோஹித்துடன் பேசப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இது ‘நீக்கம்’ என்று சொல்வதா அல்லது வேறு ஏதாவது என்று எனக்கு தெரியவில்லை. இது ஒரு பரஸ்பர விவாதமாக இருக்க வேண்டும். ஏனெனில் ரோஹித் ஒரு சிறந்த தலைவராக இருந்துள்ளார்.”

“கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் டி20 உலகக் கோப்பையை வென்றார். அவர் சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். எனவே, ரோஹித் ஷர்மாவின் செயல்பாடு ஒரு பிரச்சினை இல்லை.தேர்வுக்குழுவினரின் மனதில் இருந்தது, இரண்டு ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவில் உலகக் கோப்பை நடக்கும்போது அவருக்கு 40 வயதாக இருக்கும்.”

- Advertisement -

40 வயதாகி இருக்கும்:

“அவர் டி20 கிரிக்கெட் விளையாடுவதில்லை. எனவே, 2026-ல் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க மாட்டார். ஆனால் 2027-ல் தென்னாப்பிரிக்காவில் நடக்கும்போது, அவருக்கு 40 வயதாக இருக்கும். இது விளையாட்டில் ஒரு பெரிய எண்ணிக்கை. அவர் நீண்ட காலம் விளையாடியுள்ளார். எனவே, ரோஹித் 40 வயதில் உண்மையில் விளையாடுவாரா என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது.”

“எனவே, இது மோசமான முடிவு என்று நான் நினைக்கவில்லை. இது அனைவருக்கும் நடக்கும். எதிர்காலத்திலும் இதற்கு விதிவிலக்கு இருக்காது — 10 ஆண்டுகள் கழித்து ஷுப்மன் கில் 40 வயதை நெருங்கி, 12,000-13,000 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும். இது எனக்கும் நடந்துள்ளது, டிராவிட்டுக்கும் நடந்துள்ளது.”

இதையும் படிங்க: என் யாக்கர்களுக்கு பும்ரா தான் காரணம்..மிஷனை விட சிறந்தவர்.. அர்ஷ்தீப் சிங் பாராட்டு

“40 என்பது அதிக வயது. இது அவரைப் பொறுத்தது,அவர் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறார். எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார். எத்தனை ரன்கள் எடுக்கிறார். ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் விளையாடுவது எளிதல்ல. ஆமாம், அவர் ஐபிஎல் விளையாடுவார், ஆனால் அது ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே நடக்கிறது. கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, அதில் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்” என்று கங்குலி கூறினார்.

- Advertisement -