1735.. லெஜெண்ட் சச்சினின் சாதனையை காலி செய்த ரோகித் சர்மா.. மெகா பார்ட்னர்ஷிப்.. இந்திய அணி முன்னிலை

0
259
Rohit

இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா Python லெஜன்ட் சச்சின் டெண்டுல்கரின் மெகா சாதனையை முறியடித்திருக்கிறார்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக திலக் வர்மா இடம்பெற்றார்.

- Advertisement -

சரிந்த தென் ஆப்பிரிக்கா

முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் மிகச் சிறப்பாக விளையாடி 80 பந்துகளில் சதம் அடித்து 89 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் டெம்பா பவுமா 67 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் பெரிய பங்களிப்பு கொடுக்கவில்லை.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. மேற்கொண்டு 102 ரன்கள் மட்டுமே எடுத்து தென் ஆப்பிரிக்க அணி 270 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் கலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மா சாதனை

இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பாக விளையாடி, இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார்கள். இதைத்தொடர்ந்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 155 பந்துகளில் 155 ரன்கள் சேர்த்தார்கள்.

இதற்கடுத்து சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 73 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக சர்வதேச ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரராக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : 168/2 டு 270/10.. திருப்பம் தந்த கேஎல் ராகுலின் திட்டம்.. பிரசித் குல்தீப் அசத்தல்.. தென் ஆப்பிரிக்க அணி சுருண்டது

1735- ரோஹித் சர்மா
1734 – சச்சின் டெண்டுல்கர்
1483 ஷிகர் தவான்
1466 – வீரேந்தர் சேவாக்
1135-சௌரவ் கங்குலி

- Advertisement -