கேப்டன்ஷியில் ரிக்கி பாண்டிங் விராட் கோலியை தட்டித் தூக்கி ரோகித் சர்மா புதிய உலகச்சாதனை!

0
237
Rohitsharma

கடந்த ஆண்டு விராட் கோலி தலைமையில், ரவிசாஸ்திரி பயிற்சியின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 தொடரில் முதல் சுற்று ரோடு தோற்று வெளியேறி அதிர்ச்சி அளித்தது இந்திய அணி!

டி20 உலக கோப்பையில் ஏற்பட்ட இந்த படுதோல்வி இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்களை உருவாக்கியது. இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

- Advertisement -

இவர்கள் பொறுப்புக்கு வந்த பின், வெள்ளைப்பந்து கிரிக்கெட் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை மாற்றி அமைக்கப்பட்டது. அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் தைரியமான முறையில் ஆட அறிவுறுத்தப்பட்டார்கள். இதை முன்னின்று கேப்டன் ரோகித் சர்மாவே செய்தார். இதனால் அவரது தனிப்பட்ட ரன் சராசரி குறைந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்தது. அதுபோலவே அணியின் பவர் பிளே ஸ்கோரும், அணியின் மொத்த ஸ்கோரும் அதிகரிக்க ஆரம்பித்தது.

ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் இவர்களின் தலைமைக்கு கீழ் இந்திய அணி தைரியமான ஆட்ட அணுகுமுறையில் நிறைய வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த ஆசிய கோப்பையில் ஒரு பரிசோதனை முயற்சி தோல்வியடைய அந்தத் தொடரில் தோற்க வேண்டியதாய் இருந்தது உண்மை. மற்றபடி இந்தக் கூட்டணி கைவைத்த எல்லாமே அதிகப்படியாக நல்ல முடிவுகளையே கொடுத்திருக்கிறது. தற்பொழுது டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

இப்படியான வெற்றிகள் மூலம் கேப்டன்ஷியில் ரோகித் சர்மா புதிய உலகச் சாதனையை படைத்திருக்கிறார். அந்தச் சாதனை என்னவென்றால்; குறைந்த போட்டிகளில் ஐம்பது வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்கின்ற சாதனையே அது. இந்தச் சாதனை இதற்கு முன்பு உலக கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய ரிக்கி பாண்டிங் வசம் இருந்தது.

- Advertisement -

குறைந்த போட்டிகளில் 50 வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களின் டாப் 10 வரிசை :

ரோகித் சர்மா – 62
ரிக்கி பாண்டிங் – 63
சர்பராஸ் அகமத் – 68
விராட் கோலி – 70
ஹன்சி குரோனியே – 72
மைக்கேல் கிளார்க் – 74
விவியன் ரிச்சர்ட்ஸ் – 74
பாப் டு பிளசிஸ் – 75
அஸ்கர் ஆப்கான் – 77
ஸ்டீவ் வாக் – 80