“ரோகித்கிட்ட இந்த 3 விஷயம் இருக்கு.. அவர் டீமை ஒன்னும் பண்ண முடியாது!” – மும்பை லெஜன்ட் வீரர் பரபரப்பான பேச்சு!

0
3531
Rohit

இந்திய கிரிக்கெட்டில் உள்நாட்டு கிரிக்கெட்டோடு நின்றுவிட்ட ஒரு ஜாம்பவான் வீரர் அமோல் மசூம்தார். இவர் இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேலும், 30 சதங்களும் 60 அரை சதங்களும் அடித்தவர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவரை போன்ற வாசிம் ஜாஃபருக்கு இந்திய அணியில் சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தற்பொழுது 48 வயதாகும் இவருக்கு அவருடைய காலத்தில் ஒரு வாய்ப்பு கூட இந்திய அணியில் கிடைக்கவில்லை. அப்பொழுது இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்களின் தேவையும் இருந்தது. இவரது கதை வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது!

- Advertisement -

மும்பை வீரரான தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் குறித்து மிகவும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். ஒரு கேப்டனாக அவர் எவ்வாறு செயல்படுகிறார்? என்று, சில நுட்பமான விஷயங்களை வெளியில் முன் வைத்திருக்கிறார்.

ரோகித் சர்மா குறித்து இவர் கூறும் பொழுது “ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து நான் மூன்று விஷயங்களை முன் வைக்க விரும்புகிறேன். ரோகித் சர்மா தரவு மற்றும் புள்ளி விவரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இது ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. அனைத்து வீரர்களின் எல்லாவிதமான புள்ளி விபரங்களும் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இரண்டாவதாக எல்லா விஷயங்களையும் எளிமையாக வைத்து தனது அணி வீரர்களை எல்லாவற்றையும் எளிமையாக உணர வைக்கிறார். அணியில் உள்ள அனைவரையும் மிகவும் அமைதியான குளிர்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்கிறார்.

- Advertisement -

அவரது கேப்டன்சி பாணி மிகவும் வித்தியாசமானது. அவர் தன்னுடைய வீரர்களிடம் உரிமையாகவும், மிகவும் அன்பாகவும் இருக்கிறார். இதனால் விஷயங்கள் மிக எளிமையாக இருக்கிறது.

மூன்றாவதாக அவருக்கு ஒரு மேஜிக் டச் இருக்கிறது. அவர் எந்த மாற்றங்கள் செய்தாலும் அது ஒரு மேஜிக் போல வெளிவருகிறது. உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அந்த மேஜிக் டச் வந்தது. அவர் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றார். இந்த முறை உலகக் கோப்பையிலும் அது நடக்கும் என்று நினைக்கிறேன்!” என்று கூறியுள்ளார்.