கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

2021-ல் கோலி சொன்னதை செய்த ரோகித் டிராவிட்.. இந்தியா மாஸ் ரெக்கார்டு!

2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்று முதல் சுற்று உடன் வெளியேறியது.

- Advertisement -

இந்தத் தொடரின் முடிவில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் விராட் கோலி இந்திய வீரர்கள் சரியான இன்டெண்ட் யாரும் காட்டவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் அமையப்பெற்ற அணி அதிரடியான அணுகுமுறையுடன் இன்டெண்ட் காட்டி விளையாடும் என்று கூறப்பட்டது.

இதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தானே முதலில் பொறுப்பு எடுத்துக்கொண்டு துவக்க வீரராக அதிரடியான அணுகுமுறையுடன் ஆட்டத்தை எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

- Advertisement -

அவர் கேப்டன் ஆனது முதல் இதன் காரணமாக அவரது ரன் சராசரி குறைந்தது. ஆனால் அதிரடியாக ஆடுகின்ற காரணத்தினால் ஸ்டிரைக் ரேட் அதிகரித்தது. மேலும் அவருக்கு பின்னால் வரும் ஒவ்வொரு வீரர்களும் அதிரடியாக விளையாடுவதை நோக்கமாகக் கொண்டனர்.

இந்த ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராக ரோகித் சர்மா தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராகவும் அவரே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இண்டெண்ட் காட்டி அதிரடியாக விளையாட இந்திய அணி முடிவு எடுத்ததற்கான ரிசல்ட் தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக இந்திய அணி மாறியிருக்கிறது. குறிப்பாக சிக்ஸர்கள் அடிப்பதில் சிறந்தவர்களான வெஸ்ட் இண்டீஸ் அணியை தாண்டி இந்திய அணி இந்தச் சாதனையை படைத்திருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்னதை செய்து காட்டி இருக்கிறார்கள்.

ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி :

இந்தியா 215 சிக்ஸர்கள் 2023
வெஸ்ட் இண்டீஸ் 209 சிக்ஸர்கள் 2019
தென் ஆப்பிரிக்கா 203 சிக்ஸர்கள் 2023
நியூசிலாந்து 179 சிக்ஸர்கள் 2015
ஆஸ்திரேலியா 165 சிக்ஸர்கள் 2023

- Advertisement -
Published by

Recent Posts