ரோகித் கேப்டனாக தொடர்வாரா?.. அவரது கிரிக்கெட் எதிர்காலம் என்ன?.. சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்!

0
5882
Rohit

2021 ஆம் ஆண்டு விராட் கோலி முதன்முதலாக இந்திய டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். அப்பொழுது உடனடியாக ரோஹித் சர்மா அடுத்த கேப்டனாக கொண்டுவரப்பட்டார்.

மேலும் டி20 வடிவத்தில் கேப்டனாக இல்லை என்றால் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்திலும் கேப்டனாக இருக்க முடியாது என்று கூடி விராட் கோலி நீக்கப்பட்டார். வெள்ளைப் பந்தின் 2 வடிவத்திற்கும் ரோஹித் சர்மா கேப்டன் ஆனார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விராட் கோலி டெஸ்ட் தொடரை கேப்டனாக இழந்தார். இதற்கு அடுத்து உடனடியாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.

அந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா இருவரது பெயரையும் கிரிக்கெட் வல்லுனர்கள் அடுத்த கேப்டனாக வலியுறுத்தினார்கள்.

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக மூன்று வடிவத்திற்கும் ஒரே கேப்டன் என ரோகித் சர்மாவையே கொண்டு வந்தது. ரோகித் சர்மா தற்பொழுது மூன்று வடிவிலான உலகக் கோப்பை போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து தொடரை இழந்திருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு தற்பொழுது 36 வயது ஆகின்ற காரணத்தினால் அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விளையாட முடியாது. மேலும் அவர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 தொடரில் விளையாடுவாரா என்பதும் இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது.

பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்திகள், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்க்கரிடம் ரோகித் சர்மா தன்னை வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்தில் தேர்வு செய்யவில்லை என்றால் அது பிரச்சனை இல்லை என்று கூறி இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா பிசிசிஐ தரப்பில் இருந்து கூறும் பொழுது “இப்போதைக்கு அடுத்த இரண்டு வருடங்கள் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்தில் ரோஹித் சர்மா ஒரு வீரராகவும் கேப்டனாகவும் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடிய ஒரு கேப்டனை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட் வடிவங்களில் தொடர்ச்சியாக கேப்டனாக இருப்பார் என்று கூற முடியாது. அவரது காயம்பிரச்சனையாக இருக்கும். எனவே பிசிசிஐ புதிய கேப்டனை தேடுகிறது!” என்று கூறப்பட்டிருக்கிறது!