“எங்களுக்காக பயிற்சியாளர்கள் கிட்ட ரோகித் பாய் இதை எப்பவும் சொல்லுவார்!” – கில் ஓபன் டாக்!

0
1943
Gill

தற்பொழுது இந்திய அணியில் மிக வேகமாக புகழ் அடைந்து வரும் வீரராக, இளம் வீரர் பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான சுப்மன் கில் இருக்கிறார்!

இந்திய அணிக்காக அடுத்த 10 வருடங்கள் விளையாடக்கூடிய வீரராக இவரை இந்திய கிரிக்கெட் வட்டம் பார்க்கிறது. இவர் தன்னுடைய பேட்டிங் திறமையால் அப்படி பார்க்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இவரே அதிக ரன்கள் குவிப்பார் என ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் அளவுக்கு இவருடைய பேட்டிங் சீராக இருந்து வருகிறது.

ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணியில் கீழ் ஷிகர் தவானுக்கு பதிலாக இவரை இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராகக் கொண்டு வந்தது, யாரும் எதிர்பார்க்காத ஆனால் மிகப் பெரிய முயற்சி.

அதே சமயத்தில் கில் அவர்களுடைய முடிவை நியாயப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. உதாரணமாக ஐபிஎல் வரை அவர் சதங்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆசியக் கோப்பைக்கு இந்திய அணியில் இடம் பெற்ற இவரது பேட்டிங் முதல் போட்டியில் எதிர்பார்க்காத அளவுக்கு மோசமாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு தன்னுடைய தரம் என்னவென்று நிரூபித்தார். ஆசியக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆக வெளியே வந்தார். மேலும் தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டு ஆட்டங்களில் அரைசதம் மற்றும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய கேப்டன் மற்றும் உலகக் கோப்பை குறித்து பேசும்பொழுது ” ரோகித் பாய் வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரத்தை எப்பொழுதும் கொடுக்கிறார். அவர் பயிற்சியாளர்களிடம் வீரர்கள் மைதானத்தில் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வீரர்களே சிறந்த நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வார். இது ஒரு வீரராகவும் மற்றும் கேப்டனாகவும் அவருடைய சிறந்த தரம்.

ஆமாம்! எனக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. உலகக் கோப்பை தயாரிப்பு மிக நன்றாக உள்ளது. ஆசியக் கோப்பையிலும் நாங்கள் நல்ல வேகத்தை பெற்றோம். பலரைக் கொண்ட ஒரு பெரிய தொடருக்கு முன் சரியான நேரத்தில் உச்சம் அடைவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!