அடுத்த போட்டியில் ஓபன் செய்வது யாரென்று எனக்கும் ரோகித்துக்கும் எந்தக் குழப்பமும் இல்லை – ராகுல் டிராவிட் அதிரடி பேட்டி!

0
7377
Rahul Dravid

எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாத குறையும் இல்லாத இந்திய அணியைத் தற்காலத்தில் பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது!

சமீபத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்ற போது அதில் இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஹர்சல் படேல் இருவரும் கிடைக்கவில்லை.

இதற்கடுத்து டி20 உலக கோப்பையில் தற்போது ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில், இந்தியா அணிக்கு துவக்காட்டக்காரராக விளையாடி வரும் கே.எல்.ராகுலின் பேட்டிங் ஃபார்ம் ஒரு தலைவலியாக மாறி உள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளில் ராகுல் ஆடி உள்ள விதம், எதிரில் விளையாடும் பேட்மேனுக்கும் நெருக்கடியை உண்டாக்குகிறது. மேலும் அதனால் விக்கெட் இழப்புகள் நடக்கிறது. இதனால் அணிக்குப் பெரிய பிரச்சனைகள் உருவாகிறது.

இதனால் இவரை நீக்கிவிட்டு இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் மேலே வர வேண்டும் என்று பரவலாக பேச்சுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்து உள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” இந்த நிலையில் நாங்கள் அவருக்கு சிறிது நேரம் கொடுக்க விரும்புகிறோம். நாங்கள் அவரை முழுமையாக ஆதரிக்கிறோம். எங்களுக்கு எந்த கவலையும் இது பற்றி கிடையாது. ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மிகச் சிறப்பான உயர்தர ஆட்டம் ஒன்றை ஆடி காட்டி இருந்தார். இவர் என்ன செய்வார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இதனால் எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் அடுத்த போட்டியில் யார் துவக்க வீரர் என்ற எந்த சந்தேகமும் கிடையாது ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ராகுலை வைத்து விளையாடுவது எங்களுக்கு ஒன்றும் கடினம் கிடையாது. வெளியில் பேசிக்கொள்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட வீரரை பற்றி எங்களுக்கு சில நம்பிக்கைகள் யோசனைகள் உண்டு. மேலும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு கலாச்சாரம் இருப்பது எங்களுக்கு தெரியும். இங்கு விராட் கோலி ரன் அடிக்க ஆரம்பித்ததும் அடுத்து யாரை குறி வைத்து பேசுவது என்று மக்கள் ராகுல் பக்கம் போய் விட்டார்கள். நாளை ராகுல் ரன் அடித்தால் வேறு ஒரு வீரரை குறி வைத்து பேசுவார்கள். நாங்கள் 15 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம் அதில் 11 பேரைத்தான் வைத்து விளையாட முடியும். அவர்கள் எங்களுக்கு தவறாக விளையாட மாட்டார்கள் என்று தெரியும். இப்போதுள்ள சூழல் அவர்களை மோசமான வீரராக மாற்றாது. இது ஒன்றும் கடினம் கிடையாது” என்று கூறியுள்ளார்!