“ரோகித் டிராவிட் செம்மையான இந்த வேலையை செஞ்சுட்டாங்க.. உ.கோ நமக்குத்தான்!” – தேர்வுக் குழு முன்னாள் தலைவர் உற்சாகம்!

0
884
Rohit

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்ட சூழ்நிலை மிகவும் வித்தியாசமான ஒன்று!

அந்த நேரத்தில் இந்திய அணி மீதான நம்பிக்கை யாருக்கும் பெரியதாக இல்லை. வீரர்களின் காயம், எப்படியான அணி அமையும் என்கின்ற குழப்பத்தை தாண்டி, காயத்தில் இருந்து திரும்பி வந்த வீரர்கள் எப்படி செயல்படுவார்கள் என்கின்ற பெரிய சந்தேகத்தை உருவாக்கி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கு 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி இருக்கும் பொழுதுதான் 15 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அறிவிக்கப்பட்ட இந்திய அணி குறித்து அடுத்து ஆச்சரியமும் ஏற்படவில்லை.

ஆனாலும் தொடர்ச்சியாக எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வியாக இருந்தது, அணியில் ஏன் ஒரு ஆப் ஸ்பின்னர் கூட இல்லை என்பதுதான். இந்தக் கேள்வி முக்கியமாக எழுந்ததின் காரணம், அறிவிக்கப்பட்ட அணியில் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள்.

இதனால் உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் வெளியில் இருக்கும் பொழுது, அவரை உலகக்கோப்பை இந்திய அணியில் கொண்டுவர வேண்டும் என்று பலத்த கோரிக்கை எழுந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் அவரை உலக கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள இந்தியத் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் கூறும் பொழுது
“அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது மிகவும் நல்ல செய்தி. அஸ்வின் இந்தியாவில் எனும் பொழுது அவர் மிக எளிதான தேர்வாக இருப்பார். அவர் இந்திய கண்டிசனில் மொத்தமாக மூன்று வடிவங்களிலும் சேர்த்து 500 விக்கெட்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நாட்களில் அனைத்து அணிகளிலும் குறைந்தது மூன்று அல்லது நான்கு இடது கை பேட்ஸ்மேன் இருக்கிறார்கள். இடதுகை வீரர்களுக்கு எதிராக அஸ்வின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்திய உலகக்கோப்பை அணியினரும் இடம் பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!