இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இளம் வீரர் வைபவ் சூரியவன்சிக்கு எளிதானதாக இருக்காது என்று இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூரியவன்சி 35 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் 7 போட்டிகளில் 203 ஸ்ட்ரைக்ரேட்டில் 252 ரன்கள் எடுத்திருந்தார்.
வைபவ் சூரியவன்சி தான் விளையாடும் தொடர்களில் சிக்ஸர்கள் அடிப்பதில் பெரிய சாதனையை படைத்து வருகிறார். அவர் மிக எளிதாக பெரிய சித்தர்கள் அடிப்பது எதிரணிக்கு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கக் கூடியதாக உள்ளது. அதனால் அவர் ஆட்டம் இழப்பதும் நடக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார். அவருடைய இந்த தனித்துவமான அதிரடியால் இந்திய அணி எளிதாக உலகக் கோப்பையை வென்று வந்தது. ஆனால் அந்தப் போட்டியிலும் ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பு தவற விடப்பட்டிருந்தது.
இது குறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது “கடந்த 12 மாதங்களாக வைபவ் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் மிகவும் கவனமாக பார்த்து வருகிறேன். அவர் உண்மையிலேயே மிகவும் அதிசயமான வீரர். ஆனால் அவர் பேட்டிங் செய்வதை நீங்கள் பார்த்தால், இப்போது கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் நம்பி விளையாடுகிறார் என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் அவரிடம் இருந்த புதுமை இப்பொழுது போய்விட்டது”
இதையும் படிங்க: போன வருஷம் மாதிரி..இந்த தடவை அந்த பையனால சிறப்பா விளையாட முடியாது.. அவரோட பலவீனம் தெரிஞ்சிருச்சு – முன்னாள் சிஎஸ்கே வீரர்
“தற்போது அவர் இந்த அதிர்ஷ்டத்தை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்கிறார். அதில் எந்த தவறும் இல்லை. இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருக்கும் மேலும். அது அவருக்கு நீண்ட காலம் உதவும். அவர் இன்னும் ரன்கள் எடுப்பார். ஆனால் கடந்த வருடம் இருந்த அளவுக்கு இந்த வருடம் முழுக்க இருக்க மாட்டார்” என்று கூறியிருக்கிறார்.