19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா இந்திய இளம் வீரர் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்து அணிகளும் சம பலம் பொருந்திய அணிகளாக இருக்கின்றன. நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக இந்த முறை இறங்க தயாராக உள்ளன. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொருத்தவரை சஞ்சு சாம்சனை விடுத்து சிஎஸ்கே அணையில் இருந்து ஜடேஜா மற்றும் ஷாம் கரன் இருவரையும் வாங்கி பேட்டிங் வரிசையை பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தொடக்க இடத்தில் கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்ட 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஸி மீது இந்த ஆண்டு அதிக அளவு எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டில் சில போட்டிகள் மட்டுமே விளையாடி பெரிய அளவில் சோபித்த அவர் இந்த முறை அனைத்து போட்டிகளிலும் விளையாடும் நிலையில் கடந்த ஆண்டை போல அவருக்கு அதிர்ஷ்டம் இந்த முறையை பெரிய அளவில் கை கொடுக்காது எனவும் இந்த முறை அவருக்கு சற்று கடினமாக இருக்கும் என்று ராபின் உத்தப்பா குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “கடந்த 12 மாதங்களாக வைபவ் பேட்டிங் செய்து வருவதை நான் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவர் அபாரமான ஒரு வீரர், ஆனால் அவரது பேட்டிங்கை சற்று உற்று கவனித்தால் அவர் அதிர்ஷ்டத்தை நம்பியே ஆடுவது போன்று எனக்கு தோன்றுகிறது. போட்டியின் தரம் சற்று உயரும் போதும், சூழல் இன்னும் சவாலாக மாறும்போதும் அவருக்கு எந்த இடத்தில் வந்து வீச வேண்டும் என்பது எதிரணி வீரர்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது.
அவரது ஆட்டத்தில் இருந்த அந்த புதுமைத் தன்மை இப்போது நன்றாக ஆகிவிட்டது. அவர் இப்போது அதிர்ஷ்டத்தையே நம்பி விளையாடி வருகிறார் என்ற கருதுகிறேன். இது ஒன்றும் பெரிதில்லை என்றாலும் அவருக்கு இந்த சீசன் நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கும் எனவும் அவரது எதிர்காலத்திற்கு இது பெரிய உதவியாக அமையும் என்றும் எனக்கு தோன்றுகிறது. என்னிடம் கடந்த ஆண்டு அவர் எந்த அளவிற்கு வெறுத்தாரோ எந்த ஆண்டும் அதே அளவிற்கு அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை” என அவர் பேசியிருக்கிறார்.






