இந்திய பசங்க 2 பேர்.. 1 வெளிநாட்டு பையன்.. இவங்க 3 பேர்தான் பியூச்சர் சூப்பர் ஸ்டார் – ராபின் உத்தப்பா கணிப்பு

0
224
Uthappa

உலக கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாரர்களாக இருந்து வந்த பேட்ஸ்மேன்கள் பலரும் ஓய்வு பெறக்கூடிய காலகட்டத்தை எட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார்கள் ஆக இருக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் யார்? என்று ராபின் உத்தப்பாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு அவர் மூன்று இளம் வீரர்களை கூறியிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலிஸ் போன்ற ஜாம்பவான்கள் காலகட்டத்திற்கு பிறகு விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட் உலகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த நால்வருமே அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. எனவே இதற்கு அடுத்து கிரிக்கெட் உலகத்தில் சூப்பர் ஸ்டார்களாக வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் எந்த அணியில் இருந்து யாராக இருப்பார்கள்? என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதுகுறித்து ராபின் உத்தப்பாவிடம் அடுத்த 10 ஆண்டுகள் கிரிக்கெட் உலகத்தின் சூப்பர் ஸ்டார்கள் ஆக இருக்கக்கூடிய மூன்று வீரர்கள் யார் என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அவர் இரண்டு இந்திய வீரர்களை கூறியதோடு ஒரு வெளிநாட்டு வீரரையும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த ராபின் உத்தப்பா கூறும் பொழுது ” எதிர்கால கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்கள் ஆக இந்தியாவில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால், மேலும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா மூவரும் இருப்பார்கள் என்று கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி செஞ்ச வேலையால.. சாம்சன் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாட மாட்டார்- அமித் மிஸ்ரா பேட்டி

சுப்மன் கில் மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறது. இதன் காரணமாக அவரை டி20 கிரிக்கெட் வடிவத்திலும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஜெயசுவால் தனக்கு வாய்ப்பு கிடைத்த எல்லா வடிவங்களிலும் நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரச்சின் ரவீந்தரா டாப் ஆர்டரில் வந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் செயல்பட்டு கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்.

- Advertisement -