இந்திய கிரிக்கெட்

கில் பிசிசிஐ கிட்ட கேட்ட இந்த விஷயம்.. அவர ஒரு தலைவரா மாத்திடுச்சு.. ரொம்ப அருமை – ராபின் உத்தப்பா பேச்சு

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் சில நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிக முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். இது குறித்து ராபின் உத்தப்பா அவரை பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு ஏறக்குறைய கையில் இருக்கும் எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே இந்திய டெஸ்ட் அணி சிறப்பான முறையில் தயாராக வேண்டிய அவசியம் இருக்கிறது.

கில் வைத்த கோரிக்கை

தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி சொந்த மண்ணில் முழுமையாக தோற்றது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சிரமங்கள் உண்டாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இந்திய அணி விளையாடும் ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரண்டு வாரங்கள் கொண்ட பயிற்சி முகாம்கள் தேவை என இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக சிறந்த முறையில் தயாராக வேண்டிய அவசியத்திற்காக இதை அவர் கேட்டிருந்தார்.

- Advertisement -

இது மிகவும் முக்கியம்

இது குறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது “இது ஒரு கேப்டனிடம் இருந்து வந்த ஒரு துணிச்சலான முடிவு என்று நான் நினைக்கிறேன். இதைவிட சிறந்த முடிவு இருக்க முடியாது. இந்த வகையில் அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக தயாராக இரண்டு வாரங்கள் கட்டாயம் தேவை. நாம் ஒவ்வொரு போட்டியையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கியே விளையாடுகிறோம்”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. வர ஐபிஎல்ல இதை மட்டும் செய் தம்பி – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

“நாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் நாம் ஒவ்வொரு போட்டியையும் ஏனோ தானோ என விளையாட முடியாது. நாம் அதற்கு சிறப்பான முறையில் தயாராக வேண்டும். ஒரு கிரிக்கெட் வாரியம் ஆகவும் ஒரு அணியாகவும் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by