ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி போட்டி.. பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு? – உத்தப்பா கருத்து

0
70

ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா, கே எல் ராகுலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.ஜிம்பாப்வேக் எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் கடைசி போட்டி சமீபிரதாய ஆட்டமாக நாளை நடைபெறுகிறது. இதனால் நாளை ஆட்டத்தில் இந்திய அணியில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா, என்னைப் பொறுத்தவரை நாளை மிகப்பெரிய மாற்றங்கள் அணியில் நிகழ வாய்ப்பு இல்லை என கருதுகிறேன். இருப்பினும் ஷாபாஷ் அகமதுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரலாம்.இதே போன்று ருத்துராஜ் கெய்க்வாட், ராகுல் திருபாதி ஆகியோர் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு தராமல் அழைத்துச் செல்வது அவர்கள் செய்யும் அநியாயமாகும்.

அதே வேலையில் நல்ல பார்முடன் விளையாடிக் கொண்டிருக்கும் சுப்மான் கில்லை மூன்றாவது போட்டியில் வெளியே உட்கார வைப்பது சரியாக இருக்காது. இஷான் கிஷன் ஒரு போட்டியில் தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது.நாளை அவரை வெளியே உட்கார வைப்பது அவர் நம்பிக்கையை குலைக்கும். சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பும் போது இஷாந்த் கிஷன் சுப்மான் கில்லுக்கு இடம் கிடைக்காது தான்.

- Advertisement -

இதனால் நாளை என்ன செய்யப் போகிறார்கள் என்பது மிகவும் கடினமான விஷயம் தான். பந்துவீச்சு பொறுத்தவரை தீபக்சாகரை அணியில் மீண்டும் சேர்க்க வேண்டும். பிரசித் கிருஷ்ணாவுக்கு நாளைய போட்டியில் ஓய்வு வழங்கிவிட்டு ஆவேஷ் கானை அணியில் சேர்க்கலாம். இல்லையென்றால் முகமது சிராஜிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ஷர்துல் தாக்கரை அணியில் வைத்து கொள்ளலாம். வேகப்பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். இதேபோன்று கே எல் ராகுல் கடைசி ஆட்டத்திலும் தொடக்க வீரராக களம் இறங்கி ஆசிய கோப்பைக்கு முன் சற்று களத்தில் நேரத்தை செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -