விராட் கோலி கில்லுக்கு இதை செய்வீங்களா?.. ரிஷப் பண்ட்ட விட்ருங்க வேணாம் – பாகிஸ்தான் பசித் அலி கோரிக்கை

0
136
Virat

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த காரணத்தினால் அவரைப் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் வெளியில் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை விவாதிக்க கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி மறுவாழ்வில் இருந்த காரணத்தினால் நீண்ட நாட்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்காமல் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திரும்பி வந்து முதல் டெஸ்ட் ஆக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அமைந்தது. எனவே அவர் நுழைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சதம் அடித்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தோனியும் ரிஷப் பண்ட்டும்

மகேந்திர சிங் தோனி மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகள் விளையாடி ஆறு சர்வதேச டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கிறார். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் 34 டெஸ்ட் போட்டிகள் விளையாடி ஆறு டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் ஆறு முறை 90 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களின் தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்தவர் என்கின்ற விவாதங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இப்படியான விவாதம் மிகவும் தவறு என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாகவே கூறியிருந்தார். தோனியை வெறும் விக்கெட் கீப்பராக பார்க்காமல் கேப்டனாகவும் அணுக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

விராட் கோலிக்கும் கில்லுக்கும் செய்ய முடியாதது

எனவே இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பண்ட்டை தோனி உடன் ஒப்பிட வேண்டாம் என கூறி வருகிறார்கள். இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலியும் இதே கருத்தை வலியுறுத்தி பேசியிருக்கிறார். ரிஷப் பண்ட்டை தோனி உடன் ஒப்பிடுவது தவறு என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : இன்னும் 194 ரன்கள்.. முதல் வீரராக ஜெய்ஸ்வாலுக்கு கோல்டன் வாய்ப்பு.. 2வது டெஸ்டில் சாதிப்பாரா?

இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். தோனி ஒரு ஜாம்பவான் வீரர். அவர் இந்திய அணிக்கு உலகக் கோப்பைகளை வென்றிருக்கிறார் மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றிருக்கிறார்.ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுகிறார். அவர் தொடர்ந்து தனது வேலையை பார்க்கட்டும். எனவே இருவரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள். உங்களால் விராட் கோலியையும் கில்லையும் எப்படி ஒப்பிட்டு பேச முடியாதோ, அதேபோல்தான் இதுவும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -