இந்திய கிரிக்கெட்

சின்ன ஊர்ல இருந்து வந்த பையன்.. நெட்ஸ்ல செஞ்சத மேட்ச்ல காட்டி புல்லரிக்க வச்சிட்டான் – ரிஷப் பண்ட் பேட்டி

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ அணியின் இளம் வீரர் முகுல் சவுத்ரி ஆட்டம் இழக்காமல் 27 பந்தில் 54 ரன்கள் எடுத்து போட்டியை தனி ஆளாக வென்று கொடுத்தார். இது குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 181 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 16 ஓவருக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது. கடைசி நான்கு ஓவர்களுக்கு வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் முகுல் சவுத்ரி தனி ஒருவராக போட்டியை வென்றார்.

அதிரடி சிக்ஸர்கள்

இந்த போட்டியில் கடைசி 4 ஓவர்களில் பெரும்பான்மையான பந்துகளை முகுல் சவுத்ரி சந்தித்து விளையாடினார். இதில் மொத்தம் அவர் ஏழு சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். மேலும் ஹெலிகாப்டர் ஷாட் விளையாடி ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

இது குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “நாங்கள் அவரை வலை பயிற்சியில் பார்க்கும் போது அவரது திறமை தெரிந்தது. ஆனால் அதையே அவர் ஆட்டத்தில் செய்து காட்டும் பொழுது அருமையாக உணரப்படுகிறது. இதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே கிடையாது. நான் போட்டியில் ஆழத்தில் மூழ்கி விட்டேன்”

- Advertisement -

சிறிய நகரங்களில்…

“இப்போது பல வீரர்கள் சிறிய நகரங்களில் இருந்து வருகிறார்கள். நான் சொல்ல வரும் முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு தனிப்பட்ட வீரரை முழுமையாக நம்புவது, கேப்டன் மற்றும் பணி நிர்வாகம் முழுமையாக அவருக்கு ஆதரவு கொடுப்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தால் அந்த வீரர் அதிசயங்களை செய்ய முடியும்”

இதையும் படிங்க : ரிஷப் பையா கூறிய அந்த வார்த்தை தான்.. என் நம்பிக்கையை அதிகரிக்க முக்கிய காரணம் – லக்னோ வீரர் முகேஷ் சவுத்ரி பேட்டி

“இப்படிப்பட்ட வீரர்கள் ஒவ்வொருவராக வந்து ஒவ்வொரு போட்டியை வென்று கொடுக்கும் பொழுது அது அணியின் சூழ்நிலையை மாற்றுகிறது. இது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் உள்ளுக்குள் சிறப்பான ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாக நாங்கள் உணர்கிறோம். அது விரைவில் வெளிப்படும் என்று நம்புகிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by