நான் விக்கெட் கீப்பிங்கை தேர்வு செய்ய முழுக்க முழுக்க இவர் தான் காரணம் – ரிஷப் பண்ட் பகிர்ந்த சுவாரசியமான தகவல்

0
188
Rishabh Pant

இந்திய கிரிக்கெட்டில் யாராலும் அழிக்க முடியாத, ஒதுக்க முடியாத வீரர்களில் விக்கெட் கீப்பர், பினிசர், கேப்டன் என்ற பல வடிவங்களில் வெற்றிக்கரமாக வலம் வந்தவர், தற்போதும் வருபவர் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி முக்கியமானவர்!

இப்படியான ஒரு மிகப்பெரிய வீரரின் வெற்றிடத்தை நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட வீரர்தான் ரிஷாப் பண்ட். அவர் இந்திய அணிக்கு முதல் முறையாக இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக 2017ல் டி20 போட்டியில் அறிமுகமான பொழுது, அவரது வயது 19!

- Advertisement -

2015ஆம் ஆண்டு டெல்லி மாநில அணிக்காக முதன் முதலில் ரஞ்சி போட்டியில் அறிமுகமான ரிஷாப் பண்ட், அடுத்த ஆண்டு 2016ல் நடந்த அன்டர் 19 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார். அந்த ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையையும் கைப்பற்றியது.

அதே ஆண்டு 2016ல் ஐ.பி.எல்-ல் டெல்லி அணிக்காக வாங்கப்பட்டடார் ரிஷாப் பண்ட். அப்போது இருந்து இப்போது வரை அவர் டெல்லி அணியில் தொடர்வதோடு, டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார். 2017ஆம் ஆண்டு அவர் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 48 பந்துகளில் அடித்த 97 ரன்கள், அவர் எப்படியான வீரர் என்று உலகிற்கு தெரிய வைத்தது.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கான வீரராக அறியப்பட்ட ரிஷாப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில்தான் எதிரணிகளுக்கு ஆபத்தான பேட்ஸ்மேனாக இருக்கிறார். இதுவரை சர்வதேச போட்டிகளில் நான்கு சதங்கள் அடித்திருக்கிறார். நான்குமே டெஸ்ட் போட்டிகளில் அடிக்கப்பட்டது. அதில் மூன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, செளத் ஆப்பிரிக்காவில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆஸ்திரேலிய கபா டெஸ்ட் சதம் என்றும் கிரிக்கெட் உலகில் நிலைத்திருக்க கூடிய ஒன்று.

- Advertisement -

அவரின் சர்வதேச அறிமுகக் காலத்தில் அவரது பேட்டிங் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் தற்போது அவர் விக்கெட் கீப்பிங்கில் முன்னேறி உள்ளார். இதுபற்றி பேசிய அவர் “நான் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது 100% தரவே முயற்சி செய்கிறேன். நான் எப்பொழுதும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்தான். நான் விக்கெட் கீப்பிங்கில் இருந்துதான் ஆரம்பித்தேன். எனது தந்தையும் விக்கெட் கீப்பராகத்தான் இருந்தார். நான் அதனால்தான் விக்கெட் கீப்பிங்கை ஆரம்பித்தேன்” என்று கூறியிருக்கிறார்!