போவல் அடித்த இமாலய சிக்ஸர்களை நான் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன் ; ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது – ரிஷப் பண்ட்

0
1005
Rishabh Pant about Powell

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் போட்டி தொடரை தொடர்ந்து தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. போட்டியின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 45 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி உட்பட 52 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் 28 பந்துகளில் 7 ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி அடித்து 52* ரன்களுடன் இறுதி வரை பண்ட் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும் பின்னர் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் போவல் ஆகியோரும் துணைகொண்டு வெற்றிக்காக போராடியது. 41 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 62 ரன்கள் பூரன் குவித்தார். மறுப்பக்கம் போவல் 36 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரி உட்பட 68* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருப்பினும் மேற்கு இந்திய தீவுகள் அணியால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசி பார்த்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோவ்மன் போவல் ஆட்டத்தினால் மகிழ்ச்சி அடைந்த ரிஷப் பண்ட்

நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. பின்னர் போவல் மற்றும் பூரன் ஜோடி அதிரடியாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணியை சரிவில் இருந்து மீட்டு எடுத்தது. குறிப்பாக அதிரடி வீரர் ரோவ்மன் போவல் 36 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி உட்பட 68* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏறக்குறைய தோல்வி பயத்தை அவர் இந்திய அணி வீரர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் காட்டி விட்டார் என்றே சொல்லலாம்.

நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் இவரை கைப்பற்ற டெல்லி மற்றும் சென்னை அணிகள் போட்டி போட்டுக் கொண்டன. இருப்பினும் இறுதியில் டெல்லி அணி 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு இவரை கைப்பற்றியது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனும் டெல்லி அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் நேற்று ரோவ்மன் போவல் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

“துப்பாக்கியிலிருந்து புல்லட்கள் பறக்கும் வகையில் அவர் பேட்டில் பட்ட பந்துகள் பறந்தன. ஒரு பக்கம் இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாடியிருந்தாலும், உள்மனதில் இவர் டெல்லி அணிக்காக விளையாட போகிறார் என்ற சிறிய மகிழ்ச்சி தனக்கு அங்கே வந்ததாகவும் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.