ஐபிஎல்ல கேஎல் ராகுலுக்கு நடந்தது பரவாயில்ல.. எனக்கெல்லாம் தினமும் நடக்கும் – ரிஷப் பண்ட் வெளியிட்ட தகவல்

0
96
Rishabh

இந்த ஆண்டு நடந்த முடிந்த 17 வது ஐபிஎல் சீசனில் கேஎல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு சாதகமான நிலையில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறியது. மேலும் பணி உரிமையாளர் மற்றும் கேப்டனுக்கு இடையே களத்தில் வாக்குவாதம் நடந்தது. இது அப்போது பலராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, கேப்டன் கேஎல்.ராகுல் உடன் களத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கேப்டனின் முடிவுகள் குறித்து அவர் விமர்சனம் செய்தது வெளிப்படையாகவே தொலைக்காட்சியில் தெரிந்தது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இந்திய வீரர்கள் முகமது சமி இன்னும் பல சஞ்சீவ் கோயன்காவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார்கள். அணி உரிமையாளர்கள் அணியின் திட்டத்தில் தலையிடுவது சரியானது கிடையாது என கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்தார்கள்.

இந்த நிலையில் அடுத்து டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தனது வீட்டிற்கு கேல்ராகுலை வர வைத்து லக்னா அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா விருந்து கொடுத்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இப்படியான நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என பலவீரர்கள் முன்வந்து கருத்து தெரிவித்திருந்தார்கள்.

- Advertisement -

தற்பொழுது ஒரு நிகழ்ச்சியில் ரிஷப் பண்ட் இடம் இது குறித்தான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. தான் பார்த்தவரையில் என்ன தெரிந்ததோ அது வரையில் மட்டுமே தன்னால் பதில் கூற முடியும் என்று பேசிய ரிஷப் பண்ட் மிக முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “உண்மையில் அந்த சூழ்நிலையில் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நாம் பார்த்ததை வைத்து புரிந்து கொள்ளும் பொழுது அங்கு ஏதோ நடந்திருப்பதாக தெரிகிறது. நீங்கள் ஒரு போட்டியில் தோற்றால் இப்படியான உரையாடல்கள் வழக்கமாக நடக்கிறது. நான் இது குறித்து நான் சரியாக பார்த்து இருந்தால் உங்களுக்கு ஒரு பதிலை என்னால் கொடுக்க முடியும். நான் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு முறையும் திட்டு வாங்குவேன். ஆனாலும் நான் அந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்”

- Advertisement -