பல ஆண்டுகளாக இருந்த சச்சினின் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட் – நடப்பு டெஸ்டில் புதிய சாதனை

0
333
Sachin Tendulkar and Rishabh Pant

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதற்கு முன்பு நடந்த நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டில் வென்று ஒன்றில் தோல்வியுற்று மற்றொன்றை டிரா செய்ததன் மூலமாக 2-1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியை வெல்லும் பட்சத்தில் தொடரை வென்று சாதனை படைக்கலாம் என்ற முனைப்புடன் தற்போது இந்தியா விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஆண்டர்சன் முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த அதன் பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 98 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இதன் பின்பு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இருவரும் இணைந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சரமாரியாக அடித்து விரட்ட ஆரம்பித்தார் ரிஷப் பண்ட். அவருடன் ஜடேஜாவும் மிகச் சிறப்பாக ஒத்துழைக்க இந்த இருவரும் இணைந்து மேலும் விக்கட்டுகள் விடாமல் பார்த்துக் கொண்டனர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனக்கே உரிய பாணியில் மிகவும் அதிரடியாக ரன் சேர்த்தார். 53 வது ஓவர் வரை 80 பந்துகள் சந்தித்து 86 ரன்கள் எடுத்திருந்தார் பண்ட். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடக்கம்.

அந்த ஒரு சிக்சர் அடித்தது மூலம் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பண்ட் பெற்றார். இதற்கு முன்பு வரை இந்த சாதனை சச்சின் இடம் இருந்தது. 25 வயதில் இந்த சாதனையை சச்சின் தொட்டு இருந்தார். ஆனால் தற்போது 24 வயதிலேயே அந்த மைல் கல்லை பண்ட் எட்டிவிட்டார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்து வீச்ச்சாளரின் தலைமையில் இந்திய அணி களம் காண்பது ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. தற்போது பண்ட்டும் ஒரு சாதனையை படைக்க மேலும் இது இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்னமும் நிலைத்த நின்று இந்திய வீரர்கள் விளையாடும் பட்சத்தில் இந்திய அணி இந்த போட்டியை வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -