இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் சதத்திற்காக ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் அவசரப்பட்டு இருக்கக் கூடாது என அனில் கும்ப்ளே விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் முதல் அமர்வின் கடைசி ஓவரில் கேஎல்.ராகுல் சதத்திற்காக ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டதில் ரிஷப் பண்ட் பரிதாபமாக விக்கெட்டை கொடுக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
ஜோ ரூட் புத்திசாலித்தனம்
இதே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் நாள் முடிவில் 99 ரன்கள் எடுத்திருந்தார். சதம் அடிப்பதற்காக அவர் ஒரு நாள் இரவு முழுக்க காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இருந்தபோதிலும் அவர் முதல் நாளின் கடைசி நேரத்தில் அவசரம் காட்டாமல் மரியாதை கொடுத்து வெளியேறினார்.
இந்த நிலையில் இரண்டாவது நாள் முதல் அமர்வின் கடைசி ஓவரில் கேஎல்.ராகுல் சதம் அடிப்பதற்காக தேவை இல்லாமல் ரிஷப் பண்டுக்கு ஓடுவதற்கு சிக்னல் கொடுக்க அவர் ரன் அவுட் ஆகிவிட்டார். இதன் காரணமாக இரண்டாவது அமர்வில் இந்திய அணி 25 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது. ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தது பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.
அனில் கும்ப்ளே விமர்சனம்
இது குறித்து பேசி உள்ள அனில் கும்ப்ளே கூறும்பொழுது ” இதில் பந்தை தடுத்ததும் ரிஷப் பண்ட் ரன் ஏதும் இல்லை என தயங்கினார். ஆனால் கே.எல்.ராகுல் ரன் எடுப்பதற்காக வெளியில் வந்துவிட்டார். அவர் மேலும் தொடர்ந்து ரன் எடுப்பதற்காக ஓட ரிஷப் பண்ட் தாமதமாக துவங்கினார். இதன் காரணமாக அவர் ரன் அவுட் ஆகிவிட்டார். அவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வந்து, முதல் அமர்வில் செய்ததை அப்படியே தொடர்ந்து சிறப்பாக செய்திருக்கலாம்”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் செய்த ஒரு மெகா தவறு.. கடுப்பான கம்பீர்.. சின்ன பசங்க கூட இப்படி செய்ய மாட்டாங்க
“இதே இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளை எடுத்துக் கொள்ளும் பொழுது, அந்த நாளின் முடிவில் ஜோ ரூட் 99 ரன்கள் எடுத்து சதம் அடிப்பதற்காக அவசரம் காட்டாமல் சென்றார். பிறகு ஒருநாள் இரவு முழுக்க காத்திருந்து வந்து இரண்டாவது நாளில் சதம் அடித்தார். இதை இந்திய பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறி விட்டார்கள்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






